சென்னையை நெருங்கி வரும் மாண்டஸ் புயல் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

சென்னையை நெருங்கி வரும் மாண்டஸ் புயல் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

 சென்னை, டிச.8 தெற்கு அந்த மான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த 5-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இது மேற்கு-_வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப் பெற்றது. இந்த தாழ்வு மண்ட லம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக நேற்று மாலை மாறும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற் றிரவு தான் புயலாக வலுவ டைந்தது. இந்த புயலுக்கு "மாண்டஸ்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த புயல் காரைக்காலுக்கு 560 கி.மீ. தூரத்திலும், சென் னைக்கு 640 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசை யில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும், சிறீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை (9-ஆம் தேதி) நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்தது. 

இதற்கிடையே இன்று அதி காலை 5.30 மணி நிலவரப்படி மாண்டஸ் புயல் தென் மேற்கு வங்க கடலில் காரைக்காலுக்கு கிழக்கு-தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் நிலவியது. சென்னையை நெருங்கிவரும் இந்த புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங் களில் மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப் பேட்டை, வேலூர், திருப்பத் தூர், திருவண்ணாமலை, கள் ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங் களில் நாளை கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 

இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங் களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது. நாளை மறு நாள் (சனிக்கிழமை) திருவள் ளூர், சென்னை, ராணிப் பேட்டை, காஞ்சிபுரம், செங் கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யும். 11-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி உள்பட 22 மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும். சென் னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்தது. 

மாண்டஸ் புயல் நாளை சென்னையை நெருங்கக் கூடும் என்பதால் இன்று முதல் சனிக்கிழமை வரை தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர பகுதி களில் பலத்த காற்று வீசக்கூடும்.

 எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டு கடலோ ரப் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடல் கொந் தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது. 


No comments:

Post a Comment