10 சதவிகித இடஒதுக்கீடு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

10 சதவிகித இடஒதுக்கீடு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடில்லி, டிச.8 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான ரிட் மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த இடஒதுக்கீடு செல்லும் என கடந்த மாதம் 7 ஆம் தேதி தீர்ப்பு கூறியது. 

இந்நிலையில் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம் சங்கள் வருமாறு:- 

‘‘பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே, பின்தங்கிய முன்னேறிய வகுப் பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக் கப்பட்டுள்ளதாக பெரும்பான்மை தீர்ப்பு தவறான ஊகத்தின் அடிப்படையில் உள்ளது. குடும்ப வருவாய், பொருளாதார நலிவு, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகிய பிரிவினர் அல்லாத வர்கள் ஆகிய இரு அளவீட்டு விதிகளின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின ருக்கான இடஒதுக்கீடு என்றால், அந்த இடஒதுக்கீடு பொருளாதாரத்தில் நலிந்த அனைத்துப் பிரிவினருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த இடஒதுக்கீடு கிரீமிலேயர் விலக்கு அளித்து, முற்பட்ட ஜாதியினருக்கும், முன்னேறிய பிரிவினருக் கானதாகவும் உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு பொருளாதார இடஒதுக்கீடாக அல்லாமல், சமூக, ஜாதிகளின் அடிப்படையில் அமைந் துள்ளது. முன்னேறிய பிரிவினருக்கு ஆதரவான ஒன்றிய அரசின் நடவடிக்கை, அரசமைப்பு சாசனத்தின் அடிப்படையை மீறுகிறது என்ற வாதத்தை பெரும்பான்மை தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை. நீதிபதி ஜே.பி.பார்திவாலா அளித்த தீர்ப்பில், இதர பிற்படுத்தப்பட்டோர் அரசியல் பிரதிநிதித் துவத்தை பெற்றுள்ளதாகவும், இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு வரம்பில்லாமல் இருப்பதாகவும் தவறாக தெரிவித்துள்ளார். எனவே, பொருளாதாரத் தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக் கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்'' என கோரப்பட்டுள்ளது. 

இதே விவகாரத்தில் காங்கிரசை சேர்ந்த ஜெயதாக்குர், தி.மு.க.வின் அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஏற் கெனவே மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment