சென்னை, டிச. 8- தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளாகிய முனைவர் லதா ராஜேந் திரன், ஜானகி அம்மையா ரின் நூறாவது ஆண்டு தொடக்க விழாவை யொட்டி, தமிழ்நாடு முத லமைச்சரிடம் ரூ. 10 லட் சத்தினை நன்கொடை யாக 'தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு' வழங்கினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளா கத்தில் நடைபெற்ற ஜானகி அம்மையாரின் நூறாவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியின் போது, அதில் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர் களிடம், இத்தொகையை அவர் வழங்கினார். ஜானகி அம்மையார், தமிழகத் தின் முதல் பெண் முதல்வ ராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப் பிரமணியன், தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, டாக்டர் எம்.ஜி. ஆர். ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி யின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் உள் ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment