தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (10.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, புயல் மழையால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment