குறிஞ்சிப்பாடி, டிச. 9- தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழாவை முன் னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற பெரியார் 1000 வினா--விடை போட்டியில் கடலூர் மாவட் டம் குறிஞ்சிப்பாடியில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி 6.12.2022 அன்று காலை 11 மணி அளவில் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் மு.பழனிவேல் தலைமையில் நடைபெற் றது. சிறப்பு அழைப்பாள ராக கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு ஆடை போர்த்தி பரிசினை வழங்கி அறிவுரை கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர் பெரியார் செல் வம் ஒருங்கிணைத்தார்.
உதவி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், ஆசிரியர்கள் கிருஷ்ண மூர்த்தி, குமரவேல், விசுவ நாதன், ராமமூர்த்தி, ரஞ்சித் குமார், பழனிச்சாமி, சக்தி முருகன், உடற்கல்வி ஆசிரியர் டென்னிசன் தாமோதரன் ஆகியோ ரும், மாவட்ட கழக அமைப் பாளர் மணிவேல், ஒன் றிய அமைப்பாளர் சேகர், வடலூர் தீனமோகன் ஆகியோர் கலந்து கொண் டனர். முதல் பரிசு பெற்ற மாணவர் பிரவீன் குமார், இரண்டாம் பரிசு பெற்ற மாணவர் உத்திரகுமார், மூன்றாம் பரிசு பெற்ற மாணவர்கள் ஆதிஷ், செந்தில்குமார் மற்றும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் பாராட்டப் பெற்றனர்.
No comments:
Post a Comment