செங்கல்பட்டில் பேரெழுச்சியோடு நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடைப் போட்டி பரிசளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

செங்கல்பட்டில் பேரெழுச்சியோடு நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடைப் போட்டி பரிசளிப்பு விழா

செங்கல்பட்டு, டிச. 8- பெரியார் மணி யம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகமும் பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய பெரியார் 1000 - வினா விடைப் போட்டிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பங்கேற்று வெற்றி  பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவும்; தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வும் 03.12.2022 சனிக்கிழமை மாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் அருகிலுள்ள நகராட்சி திருமணக் கூடத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் சுந்தரம் தலைமை யில் மறைமலை நகர் நகரத் தலை வர் திருக்குறள் வெங்கடேசன் குறளோதலோடு தொடங்கிய இவ் விழாவுக்கு தி.இரா.இரத்தி னசாமி, அ.சிவக்குமார், சி.தீனத யாளன், பொன்.இராசேந்திரன், முருகன், விடுதலை சாமு, சால மன், கவிஞர் யாழன், சமத்துவ மணி, தெள்ளமிழ்தன், சு.ஆனந்தி, க.தனசேகரன், மு.அருண், வினோத், கலைவாணி, சிந்து, நித்யானந்தம் உள்ளிட்ட கழக - பகுத்தறிவாளர் கழகத் தோழர் கள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் அ.செம் பியன் வரவேற்றிட, மாவட்ட ஆசிரியரணித் தலைவர் சே. சகா யராஜ் நெறியாளுகை செய்து தொகுத்து வழங்கினார்.

பெரியார் 1000 - போட்டித் தேர்வின் நோக்கத்தையும், பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகப் படிப்பு கள், உதவித்தொகைகள் பற்றி யும் விளக்கி பேராசிரியர் முனை வர் ஆ. முத்மிழ்ச்செல்வன் உரை யாற்றினார். கலை அறப்பேரவை மு.கலைவாணன் போட்டியா ளர்களை வாழ்த்தினார். பேராசி ரியர் கனகவினாயகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 90ஆம் - பிறந்தநாள் விழாச் சிறப்பு ரையாற்றினார். செங்கல்பட்டு நகரமன்றத் தலைவரும் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல் கலைக்கழக மேனாள் மாண வருமான தேன்மொழி நரேந்தி ரன்  வெற்றியாளர்களுக்குப் பரி சுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

தந்தை பெரியார் அவர்களின் 142ஆம் பிறந்தநாளை முன் னிட்டு மாநில அளவிலான மாபெரும் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி செப்டம்பர் 2022இல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 31 பள்ளி கள் இப் போட்டியில் பங்கேற்று 2022, செப்டம்பர் 1, 2 ஆகிய நாள்களில் 2089 மாணவர்கள் தேர்வு எழுதினர். இப்போட்டி களில் வெற்றிபெற்ற 127 பேருக் குப் பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர் களுக்கு முறையே ரூ. 500, 450, 400 மதிப்பிலான புத்தகக் கொத்துகளும் பதக்கங்களும்; மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் - முதலாமி டம்: ஸ்டாலின் பிரபாகரன் (அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு), இரண்டாமிடம்: விக்னேஷ் (புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருங்களத்தூர்), மூன்றாமி டம்: இராஜு மற்றும் திவ்யா (அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாம்பாக்கம்) ஆகியோருக்கு ரூ.750 மதிப்பிலான புத்தகக் கொத்துகளோடு முறையே ரூ.3000, 2000, 1000, 1000 பரிசுத் தொகைகளும் பதக்கங்களும் கேடயங்களும்; மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ள மாணவர் பூஜா சிறீ (அரசினர் மேல்நிலைப்பள்ளி, பெருங்குடி) ரூ.750 மதிப்பிலான புத்தகக் கொத்துகளோடு முறையே ரூ.5000 பரிசுத் தொகையும் பதக்க மும் கேடயமும் வழங்கப்பட்டன.

பரிசுநூல்களுள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘கற் போம் பெரியாரியம்’ 130 நூல்க ளுக்கான தொகை முழுவதையும் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக மற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் ஏற்றுக் கொண்டனர். பரிசுத் தொகை, கேடயம், தேநீர் மற்றும் சிற் றுண்டி முழுவதும் மாவட்ட ஆசிரியரணித் தலைவர் சே. சகா யராஜ், அன்பரசு, பார்த்தசாரதி ஆகிய தோழர்கள் பொறுப் பேற் றனர். பெண் ஏன் அடிமையா னாள்?, பெரியார் பொன்மொழி கள், பெரியார் வாழ்க்கை வர லாறு, அம்பேத்கர், வள்ளுவம் உள்ளிட்ட சற்றொப்ப 450 சிறு குறு நூல்களை முனைவர் முத் தமிழ் பொறுப்பேற்று வழங்கினார்.

மிக எழுச்சியோடு தொடங்கி மாலை 5.30 மணிக்கு மு.பிச்ச முத்துவின் நன்றியோடு நிறை வுற்ற இவ்விழாவில் 120 மாண வர்களும் 50க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், 20க்கும் மேற் பட்ட ஆசிரியப் பெருமக்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இப் போட்டி சிறப்பாக நடைபெற பெருமுயற்சி எடுத்து உதவிய பள்ளிக்கல்வி இயக்குநர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைத்து அலுவலர் களுக்கும்; இத் தேர்வுகளையும் விழாவையும் செம்மையாக நடத்திக் கொடுக்க உதவிய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அத்துனை ஆசிரியப் பெருமக் களுக்கும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பிலும் மாவட்டக் கழகம் மற்றும் விழாக்குழு சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகம் வழங் கும் படிப்புகளையும் உதவித் தொகைகளின் பட்டியலையும் கேட்டு வியந்த விழாவில் பங் கேற்ற ஆசிரியர்களும் பெற் றோர்களும் கழகத் தோழர்களும் பெரியார் 1000 போட்டித் தேர் வில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கும் ஒரு உதவித் தொகையை அறிவித்திட வேண் டும் என்கிற கோரிக்கையை இவ் விழாவின் வழியாகப் பல்கலைக் கழக வேந்தர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களுக்கும், ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.அன்புராசு வுக்கும், பல்கலைக் கழக நிருவா கத்துக்கும் நன்றியோடு விடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment