திருச்சி, டிச. 22- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டியினை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியானவுடன் திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத் தில் உள்ள பள்ளிகளில் போட் டியை நடத்தத் திட்டமிட்டு திரு வெறும்பூர் ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்சுடர், பெல் ஆறுமுகம் ஆகி யோர் பல பள்ளிகளில் சென்று அதற்கான கடிதத்தை பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வழங் கினார்கள். அனைத்து தலைமை ஆசிரியர்களும் இப்போட்டியினை நடத்த அனுமதி அளித்தனர்.
அதன்படி அண்ணாநகர் ஆண் கள் உயர்நிலைப்பள்ளி, அண்ணா நகர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, போலீஸ் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சோழ மாதேவி ஆதி திராவிடர் நல மேல் நிலைப்பள்ளி, பூலாங்குடி அரசி னர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை அணுகிய போது போட்டியை நடத்த அனுமதி அளித்தனர். ஆனால் இங்கு படிக் கும் மாணவர்கள் பொருளாதா ரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களால் தேர்வு க் கட்டணம் ரூ.50 செலுத்த முடியாது என்பதால், நமது ஆதரவாளர் பலர் நன்கொடை அளிக்க முன் வந்தார்கள்.
அதனால் மேலும் பல பள்ளி களில் நடத்தலாம் என்று திட்ட மிட்டு மாத்தூர் அரசு சிறப்பு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியர் ஆகியோரை அணுகிய போது, மிகவும் ஆர்வத்தோடு மாணவர் களின் பட்டியலைக் கொடுத்தார் கள். இப்பள்ளி அமைந்துள்ள இடம் புதுக்கோட்டை மாவட்ட மாகும். புதுக்கோட்டை மாவட் டம் சார்பில் இங்கு வந்து நடத்த முடியாத அளவு தொலைவில் உள் ளது. எனவே திருச்சி மாவட்டத் துடன் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் துப்பாக்கித் தொழிற் சாலையில் இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. அது ஒன்றிய அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் அவர்கள் இதில் கலந்து கொள்வார்களா? மாட்டார்களா? என்ற அய்யத்துடன் சென்று அணுகி போது, உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரும், மேல் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரிய ரும் மிகவும் ஆர்வத்துடன் இதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். பெரியாரைப்பற்றி நமது பிள்ளை கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி அந்தப் பள்ளிகள் ஒவ்வொன்றில் இருந்தும் நூறு நூறு பிள்ளைகள் என்று இருநூறு பிள்ளைகளின் பட்டியலைக் கொடுத்தார்கள்.
இதையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் கிட்டத்தட்ட 500 மாணவ, மாணவிகள் பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் பங்கேற்றார்கள். போட்டிகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறி விக்கப்பட்ட பிறகு அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று பதக் கங்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு அனைத்து மாணவ, மாணவிகளுககும் புத்த கங்கள் வழங்கப்பட்டன.
அனைத்துப் பள்ளிகளிலும் தந்தை பெரியாரை பற்றி ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்சுடர், பெல் ஆறுமுகம், அண்ணாநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் இந்நிகழ் வுக்கு தாராளமாக நிதி அளித்த வீரசேகரன் ஆகியோரும் உரை யாற்றினார்கள். மேலும் பள்ளி களின் தலைமை ஆசிரியர்களும் தந்தை பெரியாரின் கருத்துக்கள் இளைய சமுதாயத்திற்குச் சென்று சேர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment