காரைக்குடி மற்றும் தூத்துக்குடியில் பெரியார் 1000 வினா-விடைப்போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

காரைக்குடி மற்றும் தூத்துக்குடியில் பெரியார் 1000 வினா-விடைப்போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு

காரைக்குடி கழக மாவட்டம் தேவகோட்டை புனித ஜான் உயர்நிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் போட்டித் தேர்வில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்: கொ. மணிவண்ணன் தேவகோட்டை நகரத் தலைவர் முருகப்பன், பகுத்தறிவாளர் கழக தோழர் சிவ தில்லை ராஜா , முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். 

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் பெரியார் 1000 போட்டித்தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு 28.11.2022 அன்று பரிசளிக்கப்பட்டது. வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ், பதக்கம், புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. இப்பள்ளியில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்குப் பணமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தூத்துக்குடி, போல்பேட்டை தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 28.11.2022 அன்று பெரியார் 1000 போட்டித்தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழும், வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழுடன்,பதக்கமும், புத்தகங்களும் பரிசளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளித் தமிழாசிரியர் மற்றும் மாவட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம், மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி, த.பெரியார்தாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி கடற்கரைச்சாலை கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் 28.11.2022 அன்று பெரியார் 1000 போட்டித்தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழும், வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழுடன், பதக்கமும்,புத்தகங்களும் பரிசளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் மாவட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம், மாவட்டச்செயலாளர் மு.முனியசாமி, துணைச்செயலாளர் இரா.ஆழ்வார்.


தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 28.11.2022 அன்று பெரியார் 1000 போட்டித் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழும், வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழுடன், பதக்கமும், புத்தகங்களும் பரிசளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மா.பால்ராசேந்திரம், மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment