கரூர், டிச. 10- கரூர் மாவட்டம் வேலா யுதம் பாளையம் சங்கரன் திடலில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் ஒன்றிய தலைவர் பழனிசாமி அவர்கள் தலைமையில் நடை பெற்றன.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட செயலாளர் ம காளிமுத்து, அனை வரையும் வரவேற்று பேசினார் .நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தலைவர் ஆசிரியர் ப குமாரசாமி, விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் குடியரசு.பொதுக்குழு உறுப்பினர்கள், சே அன்பு ,ம. ஜெக நாதன், மற்றும் மாநில வழக்குரை ஞரணி துணைத் தலைவர் மு.க ராஜசேகரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாக, கழகப் பேச்சாளர், தர்மபுரி யாழ் திலீபன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். பெரியார் ஆயிரம் தேர்வு எழுதிய மாணவ மாணவி களுக்கு பரிசுத்தொகை ரூ 16,000 வழங்கப்பட்டன. முதல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முத்தனூர் பள்ளி மாணவன் அறிவழகன் முதல் பரிசாக ரூபாய் 5000, மற்றும் இரண்டாம் பரிசு 3000 நந்தினி சிஎஸ்அய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் பரிசு 2000 காவிய சிறீ சிஎஸ்அய் பெண் கள் மேல்நிலைப்பள்ளி கரூர் ரித் திகா 2000 டிஎன்பிஎல் மெட்ரிக் பள்ளி புகலூர் மற்றும் ஆறுதல் பரிசாக பத்து பேருக்கு ஆயிரம் வீதம் ஒவ்வொருவருக்கும் வழங்கப் பட்டன.
மற்றும் நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட துணைத்தலைவர் வே ராஜு, மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், கரூர் நகரத் தலைவர் கா.நா.சதாசிவம், நகரச் செயலாளர் ம.சதாசிவம், தாந் தோணி ஒன்றியம் துணைத் தலை வர் விடுதலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், துணைத் தலைவர் பெரியசாமி, அரவக்குறிச்சி அமைப்பாளர் அறி வுரசன், கடவூர் ஒன்றிய செயலாளர் கார்த்தி, உள்ளிட்ட கழக நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கரூர் ஒன்றிய செயலாளர் அரசு காலனி இரா கிருஷ்ணன் நன்றி உரை கூறினார்.
No comments:
Post a Comment