100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு வேட்டுவைக்கும் மோடி அரசு வசதியான மாநிலங்கள்-ஏழை மாநிலங்கள் என கூறுபோடத் திட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு வேட்டுவைக்கும் மோடி அரசு வசதியான மாநிலங்கள்-ஏழை மாநிலங்கள் என கூறுபோடத் திட்டம்!

புதுடில்லி, டிச. 11- தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலா ளர்களின் ஊதியத்திற்காக 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 2 நிலவரப்படி ரூ.5,102, கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தத் திட்டத் தில் முரண்பாடுகள் உள்ளதாகவும்‘ வசதி படைத்த மாநிலங்கள்’நிதியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத் திக் கொண்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பிரதமர் மோடி, கிராமப்புறத் துறைகுறித்த சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள முக்கிய முரண் பாடுகளை சுட்டிக்காட்டியதாக வும்,  ஒன்றிய அரசு தனது 16ஆவது ஆண்டில் 100 நாள் வேலைத் திட் டத்தை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அதிகாரி கள் தெரிவித்தனர். 

இந்தத் திட்டம் வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண் டது என்று பிரதமர் கூறியதாக தெரிவித்த அந்த அதிகாரிகள், ஏழை மாநிலங்கள் 100-நாள் வேலைத் திட்ட நிதியில் தேவை யான பங்கைப் பெறவில்லை என் பதை சுட்டிக்காட்டியதாகக் கூறினர்.

பல்வேறு மாநிலங்களில் பணி யின் தன்மையில் உள்ள முரண் பாடுகளை மோடி சுட்டிக்காட் டியதாகவும், அவை தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பு வதாகவும் அதிகாரிகள் கூறினர். 

பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா , உத்தர பிரதேசம்ஆகிய அய்ந்து மாநிலங் கள்நடப்புநிதியாண்டில் 100 நாள் வேலைக்காக ஒதுக்கப்பட்ட ரூ.45,770 கோடியில், ரூ.17,814 கோடியை இதுவரை செலவிட்டுள்ளன. 

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-2021 இன்படி, இந்தியாவின் 64.5% ஏழை மக்கள் தொகையைக் கொண்ட ஆறு மாநிலங்கள், இந்த ஆண்டு இது வரை 38.9 சதவீத நிதியைப் பயன் படுத்தியுள்ளன.

2022 டிசம்பர் 2 நிலவரப்படி உத்தரப்பிரதேசத்தில் ரூ.5,157 கோடி, தமிழ்நாடு ரூ.5,102 கோடி, இராஜஸ்தானில் ரூ.4,144 கோடி, பீகார் ரூ.4,030 கோடி, சத்தீஸ்கர் ரூ.1,061 கோடி, ஜார்கண்ட்ரூ.1,325 கோடி, மத்தியபிரதேசம் ரூ.3,397 கோடி மற்றும் ஒடிசா ரூ2,842 கோடி தொழிலாளர் ஊதியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாற்றம் செய்ய வேண்டும்!

மேனாள் கிராமப்புற மேம் பாட்டுத்துறை செயலர் ஜுகல் கிஷோர் மொஹபத்ரா கூறுகையில்“ஏழை மாநிலங்களுக்குஇந்தத் திட்டத்தின்கீழ் அதிகநிதியைக் கோரும் திறனோ அல்லது உள் கட்டமைப்பு வசதியோ இல்லை. எனவே மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதியளிப்புத்திட்ட உள்கட்டமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும்”என்கிறார்.

இதற்கிடையில், இந்தத் திட் டத்தை மறு ஆய்வு செய்ய மேனாள் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசுஅமைத்துள்ளது. 

இந்தக்குழுவில் பேராசிரியர்கள் அசோக் பங்கஜ், சோனால்டே தேசாய், நிட்டி ஆயோக்கின் சேகர் போனு, ஊரக வளர்ச்சி அமைச்ச கத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பிரவீன் மஹ்தோ, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் துராஜ் அமைச்சகங்கள், நிட்டி ஆயோக் மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment