மாரடைப்பை 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய வசதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

மாரடைப்பை 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய வசதி

உலகம் முழுவதும் மனிதர்களின் எதிர்பாராத உயிரிழப்புக்கு மாரடைப்பு முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மாரடைப்பை முன்கூட்டியே அறிவதற்கான ஆராய்ச்சிகளில் இத்துறை சார்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் விளைவாக, ஒரே ஒரு எக்ஸ்-ரே மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஅய்) மூலம் 10 ஆண்டுக்கு முன்பே அறிய முடியும் என அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மார்பக எக்ஸ்-ரே எடுத்த பிறகு, மாரடைப்பை தடுப்பதற்காக ஸ்டேட்டின் தெரபி (கெட்ட கொழுப்பை குறைப்பது) தேவைப்படும் 11,430 வெளிப்புற நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண் டனர். இவர்களின் எக்ஸ்-ரே, புதியநோயாளிகளின் எக்ஸ்-ரேவுடன்ஒப்பிட்டு, மாரடைப்பு வருவதற் கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து வரு கின்றனர்.

No comments:

Post a Comment