சென்னை,டிச.17-தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
2022-2023 நிதிநிலை கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்ட சில மாநக ராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் புதிய பேருந்து நிலை யங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாக இயக்குரால் அரசுக்கு கருத்துக்கள் அனுப்பபட்டன. 9ஆவது மாநில உள்கட் டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழு, புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான மதிப்பிடப்பட்ட செலவில் 50 விழுக்காடு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியிலிருந்து மானியமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு தேவையான நிலுவைத் தொகைக்கு பல்வேறு திட்டங் களில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு நிதி கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். பேருந்து நிலையங்கள் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளதால், 'ஸ்வச் பாரத் மிஷன் 2.0'-இன் கீழ் நிதியைப் பயன்படுத்தி பொதுக் கழிப்பறைப் பகுதிக்கு நிதியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூரில் ரூ.26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திருப்பூர் மற்றும் ஓசூர் மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட வுள்ளது.
மேலும், அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக் கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சி களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி, கூடலூர் (டி), அரியலூர், வடலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல் மற்றும் பொள்ளாச்சி பேரூராட்சிகளுக்கு இதற்கான நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment