மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், அண்ணாசாலையிலுள்ள தேனாம்பேட்டையில் ”திசை புத்தக நிலையம்” திறப்பு விழா நேற்று (17-11-2022) நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையேற்று உரையாற்றினார். மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ திறந்துவைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், த.மு.மு.க. நிர்வாக உறுப்பினர் குணங்குடி அனீபா, எஸ்.டி.பி.அய் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Friday, November 18, 2022
Home
தமிழ்நாடு
திசை புத்தக நிலையம் திறப்புவிழா தமிழர் தலைவர் ஆசிரியர், வைகோ, தொல்.திருமாவளவன் பங்கேற்பு
திசை புத்தக நிலையம் திறப்புவிழா தமிழர் தலைவர் ஆசிரியர், வைகோ, தொல்.திருமாவளவன் பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment