உலக வங்கி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

உலக வங்கி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, நவ. 25 தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரி மைகள் திட்டம், உலக வங்கி நிதியுடன் ரூ.1,763 கோடி செலவில் தொடங்கப் படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (24.11.2022) மாற்றுத்திறனாளி களுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:- ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக்கூடாது. அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது 'திராவிட மாடல்' வளர்ச்சியாக அமையும். அரசின் கவனம் மிகுதியாகத் தேவைப் படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத் திறனாளிகளாகும். அவர் களின் உரிமைகளைக் காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையை உறுதி செய்யவும் இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனா ளிகள் பராமரிப்பு உதவித்தொகை தற்போது ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளிகள் பயனடைகின்றனர்.

தொழில் தொடங்க உதவி

மாற்றுத்திறனாளிக்கான திட் டங்கள் மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற உலகச் சிந்தனையற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தொழில் தொடங்க உதவி செய்ய, குறைந்தபட்சக் கல்வி தகுதியை 8-ஆம் வகுப்புத் தேர்ச் சியாக குறைத்தும், வயது உச்ச வரம்பை 45-லிருந்து 55 ஆக உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திற னாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமின்றி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக உத்தர விடப் பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 சதவீத வீடுகள் வழங்க ஆணையிடப்பட் டுள்ளது. சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதற்காகத் தள்ளுவண்டிக் கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை முன் னுரிமை அடிப்படையில் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.  

மாவட்ட அளவில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான முறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர் மட்டக் கண்காணிப்பு குழுவும் அமைக் கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளி களுக்குப் பொது இடங்களில் தடை யற்ற சூழலை அமைக்கும் நடவடிக் கையாக, சாய்தளப் பாதை, மின்தூக்கி பொருத்துதல், மாற்றுத்திறனாளி களுக்கான கழிப்பறை, பார்வையற்றோர் பயன்பாட்டிற்காக தரைத் தளங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளி குழந்தைகளை கண்டறிய வழிகாட்டு நெறிமுறை

செவித்திறன் குறைபாடு உடை யோருக்கு தகவல் பரிமாற்றம் செய்ய தகவல் பலகைகள், சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் போன்ற வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுடன் 1,763 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங் களிலும் இந்தத் திட்டம் செயல் படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலை வாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங் கிணைத்து இதர அரசுத் துறைகளின் மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும். சமூகப் பதிவு அமைப்பு மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப் பாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும். இப்படி மாற்றுத் திறனாளிகளுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வரு கிறது. இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்தக் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.   

இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், சு.ரவி, தலைமைச் செயலாளர் 

வெ.இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர். ஆனந்த குமார், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாநில ஆலோசனை வாரியக் குழுவினுடைய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பணிகளின் நிபுணர்கள். அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment