சென்னை,நவ.17- சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி சார்பில் கால்வாய் ஓரம் சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர் வரவேற்று பேசினார்.
மேயர் பிரியா முன்னிலை வைத்தார். கொசுவலைகளை வழங்கிய பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
கரோனா காலத்திற்கு பின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட் டின் கீழ் இயங்கும் கோவில்களில் திருமணம் நடத்த அனுமதிகள் வழங் கப்பட்டுள்ளது. ஏதாவது கோவில்களில் அனுமதி வழங்கவில்லை என்றாலும் குறைந்த அளவாவது திருமணங்கள் நடத்த இணை ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடமுழுக்கு போன்ற பணிகளால் ஒரு சில கோவில் களில் திருமணம் செய்வது நிறுத்தப் பட்டிருந்தாலும் சிறிய அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது. அந்த கோவிலை எடுக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல இன்னார் இனியவர் என பார்ப்பது இல்லை. இந்து அறநிலையத் துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்றுதான் பார்க் கிறோம். யாரும் சட்டத்தை மீறி செயல்பட முடியாது. அந்த கோவிலுக்கு வழங்கப்படும் காணிக்கைகள் முறையாக கணக்கு வைக்கப்படுகிறதா மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட நகைகள் சொத்துக்கள் பாதுகாக்கப் படுகின்றனவா என பார்க்கப்படும். சட்டவிதிகளை மீறி செயல்பட்டால் இந்து சமய அறநிலையத்துறை நட வடிக்கை எடுக்க தயங்காது.
No comments:
Post a Comment