குஜராத் சட்டப் பேரவை தேர்தல் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

குஜராத் சட்டப் பேரவை தேர்தல் அறிவிப்பு

 புதுடில்லி, நவ. 4 குஜராத்சட்டசபை தேர்தல் டிசமபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமைத்   தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.  

குஜராத் சட்டசபை தேர்தல்    தேதி அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.

* குஜராத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும். டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில்  வாக்குப்பதிவு நடைபெறும்; டிசம்பர் 8ஆ-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

 * 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவையின் ஆயுட்காலம் 2023 பிப்ரவரி மாதம் 18ம் தேதி முடிவடைகிறது. 

* குஜராத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 

* ஆண் வாக்காளர்கள்: 2.53 கோடி; பெண் வாக்காளர்கள்: 2.37 கோடி மூன்றாம் பாலினம்: 1,41 இலட்சம். 

* 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், திருநங்கை களின் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது. நாடு முழு வதும் 44,904 மூன்றாம் பாலின வாக்காளர்கள் பதிவு செய்யப் பட்டுள்ளனர். தேர்தலுக்காக மொத்தம் 51,700 வாக்குச்சாவ டிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் கிராமப்புறங்களில் 34,000க்கும் மேற்பட்ட வாக் குச் சாவடிகள் அமையும். மேம்பட்ட வாக்களிக்கும் அனுபவத்திற்காக, 1274 வாக்குச் சாவடிகள் பெண்கள் மற்றும் பாதுகாப்புப் பணி யாளர்களால் முழுமையாக நிர்வகிக்கப்படும். 182 வாக்குச் சாவடிகள் பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்படும். முதல் முறையாக, 33 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். இளம் வாக்குச்சாவடி ஊழி யர்களால் நிர்வகிக்கப்படும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பெண்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பார்வையாளர் வரவிருக்கும் சட்ட பேரவைத் தேர்தலில் ஈடுபடுத்தப்படுவார். 


No comments:

Post a Comment