விடுதலை சந்தா சேர்க்கையை விரைந்து முடித்தல்
தமிழர் தலைவரின் 90ஆவது
பிறந்த நாள் கருத்தரங்கம் நடத்துவது
கள்ளக்குறிச்சி, நவ. 3- கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 2.11.2022 புதன் காலை 11.00 மணி அளவில் சங்கராபுரத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட தலைவர் சுப்பராயன், மாவட்ட செயலாளர் சுந்தரராசன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.
தமிழ் தலைவர் ஆசிரியரின் 90 ஆவது பிறந்தநாள் விழாவை நடத்துவது குறித்தும் விடுதலை சந்தா சேர்க்கையை முடித்து தரு வது பற்றியும் இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கழக நிர்வாகிகள் சங்கராபுரம் ஒன்றிய தலைவர் பால சண்முகம், ஒன்றிய செயலாளர் மதியழகன், திருக்கோவிலூர் ஒன்றிய செயலா ளர் இளங்கோவன், சங்கராபுரம் நகர தலைவர் அன்பரசன், சங்கரா புரம் மாணவர் கழக பொறுப்பாளர் ஏழுமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் கரிகாலன், கழக மகளிர் அணி மஞ்சு, மாவட்ட இலக்கிய அணி தலைவர் ஜெயராமன், கடு வனூர் கழகத் தலைவர் ஆனந்தன், மூரார் பாளையம் கழகத் தலைவர் செல்வமணி, மணலூர்பேட்டை கழக தலைவர் அய்யனார், செயலா ளர் சக்தி, முருக்கம் பாடி கழகத் தலைவர் கணபதி, காங்கேயனூர் கழகத் தலைவர் முருகன், நெய்வேலி பாவேந்தர் விரும்பி, அரியலூர் திராவிட சசி கோவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் முத்து, ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினர் .
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தலைமை கழக ஆணைக் கிணங்க விடுதலை சந்தா சேர்க்கை இரண்டாம் கட்டத்தை ஒதுக்கப் பட்ட இலக்கு சந்தாக்களை விரை வாக சேர்த்து அளிப்பது,
2. தமிழர் தலைவர் ஆசிரியர் 90 வது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நடத்துவது,
3. இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தை சிறப்பாக நடத்துவது பெரியார் ஆயிரம் பரிசளிப்பு நிகழ்வுகளை சிறப்புற நடத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment