ஆளுநர் மாளிகையில் குறட்டைவிடும் மசோதாக்களைப் பாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

ஆளுநர் மாளிகையில் குறட்டைவிடும் மசோதாக்களைப் பாரீர்!

2020 முதல் இந்த ஆண்டு மே 30 ஆம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

1. 2020 ஜனவரி 13, 18 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக் கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளன.

2.  2022 ஜனவரி 12 இல் அனுப்பப்பட்ட, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா நிலுவையில் உள்ளது.

3.  ஏப்ரல் 28 இல் நிறைவேற்றப்பட்ட, மாநில பல்கலைக் கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா. 

4.  மே 5 இல் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா. 

5.  மே 12 இல் நிறைவேற்றப்பட்ட மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளன.

6.  மே 16 இல் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா.

7. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா. 

8. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திற னாளி உறுப்பினரை தேர்வு செய்வதைத் தடுக்கும் சட்டத்தை திருத்துதல்.

9.  தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவை நிலுவையில் உள்ளன.

10. மே 16 இல் நிறைவேற்றப்பட்ட, எம்ஜிஆர் மருத் துவப் பல்கலைக் கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா. 

11.  டாஸ்மாக் நிறுவன விற்று - முதலுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதா, 

12. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தம்.

13. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் 3 ஆவது சட்டத்திருத்தம்.

14. 4 ஆவது சட்டத் திருத்தம் தொடர்பான மசோ தாக்கள்.

15.   தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் - சட்டத் திருத்த மசோதா. 

16.  சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் சட்டத் திருத்த மசோதா. 

17. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா.

18.   பழைய சட்டங்களை நீக்க வழிசெய்யும் மசோதா. 

19.   மே 24 இல் நிறைவேற்றப்பட்ட, போதைப் பொருள் மற்றும் -

20.  வனம், சைபர் சட்டம், குற்றவாளிகள் தங்கள் உறவினர் இறப்புக்கு செல்ல அனுமதிப்பது தொடர்பான திருத்த மசோதா. 

21. தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது தொடர் பான மசோதா என மொத்தம் 21 சட்ட மசோதக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

22.  அக்.28 இல் ஆன்லைன் ரம்மி ஒழிப்பு மசோதா இவையெல்லாம் ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம்!

இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் குறட்டை விட்டுத் தூங்க முடியுமா? தூங்கினால் துயரப்பட நேரும் எச்சரிக்கை! எச்சரிக்கை!

No comments:

Post a Comment