மதுரை, நவ. 30- ஆன்லைன் விளையாட்டு , ஆன்லைன் லாட்டரி பழக்கம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விளை யாடுகிறார்கள், இதற்கான விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலைகள் கூட நடக்கின்றன. என நெல்லையை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு 29.11.2022 உயர்நீதிமன்றம் மதுரை கிளை யில் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரியவந்தது எப்படி? என கேள்வி எழுப்பினர். மேலும், இதில் அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. பிள்ளை களுக்கு ஆளுக்கு ஒரு அலைபேசி வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன” என கருத்து தெரிவித்து, வழக்கு தொடர்பாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், ஒன்றிய நிதித்துறை செயலருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment