கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் எழுச்சி உரை!
பெரம்பலூர், நவ.29 பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் பேருந்து நிலைய திடலில் 27.11.2022 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாவட்ட கழக தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் விஜயேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மேனாள் நகர் மன்ற துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் கி.முகுந்தன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் தெரிவித்தும், அவர்களின் தியாகத்தைப் போற்றியும், தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு தொண்டினை நினைவுகூர்ந்தும் சிறப்புரை யாற்றினார்.
கழகப் பேச்சாளர் புலவர் ராவணன் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் நடராசன், வடலூர் வசந்த், வடகுத்து தர்மலிங்கம், மாவட்ட அமைப்பாளர் துரைசாமி சின்னப்பா, தமிழர் பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், ஆதி சிவம், வேலாயுதம், சின்னசாமி, சாந்தி, சூரிய கலா, ஷர்புதீன், துரைசாமி, காமராசு, ஈசுவரன், கருணாநிதி, பிச்சை பிள்ளை, கல்பாக்கம் ராமச்சந்திரன், ரவிக்குமார், அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பொதுக் கூட்டம் ஏற்பாடு பிரமாண்டமாக செய்யப்பட்டு இருந்தது. பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்கத்தைப் பதிவு செய்ய ஏராள மான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.
No comments:
Post a Comment