அய்தராபாத், நவ.2- தெலங்கானா மாநிலம் அய்த ராபாத்தில் ராகுல் காந்தியுடன், 2016ஆம் ஆண்டு துன்புறுத்தல் காரணமாக அய்தராபாத் பல்கலை யில் தற்கொலை செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ரோஹித் வெமுலா வின் தாய், நேற்று (1.11.2022) இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கிறார்.
காலையில் நடைப்பயணம் தொடங்கியதும், ராதிகா வெமுலா, ராகுலுடன் சிறிது தூரம் நடந்து வந்தார்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டேன். காங்கிரஸ் கட்சி, பாஜக-ஆர்எஸ்எஸ் வசமிருந்து அரசியல்சாசனத்தைக் காப்பாற்ற வேண்டும், ரோஹித் சட்டத்தை அமல்படுத்தி, ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும், தலித் சமுதாயத்துக்காக அவர்களது தரப்புக்கான பிரதிநிதிகளை அதிகப்படுத்த வேண் டும். அனைவருக்கும் உரிய நீதி மற்றும் கல்வி கிடைக்கவேண்டும்'' என்றும் ராதிகா வெமுலா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன், ராதிகா வெமுலா பங்கேற்ற ஒளிப் படத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஜனவரி 17, 2016இல், 26 வயதான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது, உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி வெறிக்கு எதிராக நாடு தழுவிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment