சென்னை, நவ. 11- கருநாடக மாநி லம் மாண்டியாவில் உள்ள அரண்மனை கோயிலில் திரு டப்பட்ட ரூ.33 கோடி மதிப் புள்ள 600 ஆண்டுகள் பழைமை யான பெருமாள் சிலையை விற் பனை செய்ய முயன்ற நபரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் பழைமையான பெருமாள் சிலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக சிலை கடத் தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மத்திய மண்டல ஏடிஎஸ்பி பாலமுருகன் மேற் பார்வையில் காவல்துறை ஆய் வாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர் சிலையை கண்டறிவதற்கான நடவடிக் கையில் ஈடுபட்டனர். பிறகு கடந்த 4ஆம் தேதி அவிநாசி சாலையில் உள்ள தேநீர் கடை ஒன்றில் சிலையை விற்பனை செய்யும் தரகர் ஒருவரை சந் தித்து பேசினர்.
அப்போது 600 ஆண்டுகள் பழைமையான பெருமாள் சிலை தனது நண்பரிடம் இருப்பதாக வும், அதை அவர் ரூ.33 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த தரகர் கூறியபடி காவல்துறை குழு வினர் சிலையை ஆய்வு செய்த பிறகு நாங்கள் அந்த சிலையை வாங்கி கொள்வதாக உறுதி அளித்துள்ளார். அதன்படி கடந்த 6ஆம் தேதி கோபி செட்டிபாளையத்தில் உள்ள பழனிசாமி என்பவர் வீட்டிற்கு சென்று சிலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சிலையை ரூ.15 கோடிக்கு விற் பனை செய்ய பழனிசாமி முடிவு செய்தார். அதைதொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் இளங் கோவன் தலைமையிலான குழு வினர் அதிரடியாக பழனிசாமியை கைது செய்து அவரிடமிருந்து 600 ஆண்டுகள் பழைமையான 29.8 கிலோ எடை உள்ள 58 செ.மீட்டர் உயரம், 31 செ.மீ. அகலம் கொண்ட பெருமாள் சிலை மீட்கப்பட்டது. சிலை குறித்து கைது செய்யப்பட்ட பழனிசாமியிடம் விசாரணை நடத்திய போது, கோபிசெட்டி பாளையத்தை சேர்ந்த நட ராஜன் என்பவரிடம் உதவியா ளராக வேலை செய்த போது இந்த சிலை எனக்கு கிடைத்தது என்றும், நடராஜனுக்கு இந்த சிலை, கருநாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள அரண் மனை கோயில் ஒன்றில் அர்ச் சகராக வேலை செய்த நபர், தனது வறுமையால் நடராஜனி டம் இந்த சிலையை கொடுத்து விட்டு பணம் வாங்கி சென்றது தெரியவந்தது.
பெருமாள் சிலையை நடரா ஜன் தனது காரில் கருநாடக மாநிலத்தில் இருந்து எடுத்து வரும் போது, கருநாடக மாநில காவல்துறையினர் நடரா ஜனை கைது செய்து சிலையை பறிமுதல் செய்தனர். ஆனால் நடராஜன் சிலைக்கான போலி ஆவணங்கள் தயாரித்து நீதி மன்றம் மூலம் அந்த சிலையை மீண்டும் அவர் பெற்று கொண் டது விசாரணையில் தெரிய வந்தது. நடராஜன் இந்த பெரு மாள் சிலையை ரூ.33 கோடி முதல் ரூ.50 கோடி வரை விற் பனை செய்ய முடிவு செய்தார். ஆனால் பெரிய தொகை என்ப தால் அவரால் விற்பனை செய்ய முடியவில்லை. பிறகு நட ராஜன் கடந்த 2018ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு பழனிசாமியிடம் இந்த சிலை வந்ததுள்ளது. அதன்படி அவர் இந்த சிலையை விற்பனை செய்ய முயன்ற போது சிக்கிக் கொண்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment