சென்னை, நவ.3 அதிக அளவில் மழை பொழிந்தாலும் சென்னை யில் பாதிப்பு மிகக் குறை வாக உள்ளது என அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:சென்னையில் அதிக அளவில் மழை பெய்தாலும் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. ஒரு சில இடங்களில் பாதிப்புகள் உள்ளது. மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, தூர்வாரும் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றே ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் 6 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 700 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் இந்தாண்டு 40 இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு 1600 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 400 மோட்டார்கள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்துள்ளது.
தியாகராஜர் நகர், ஜி.என்.செட்டி ரோடு மற்றும் சீத்தாம்மாள் காலனி பகுதிகளில் கடந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தற்பொழுது இல்லை. சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை. வடசென்னை பகுதியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டும் தாழ்வான பகுதி என்பதால் மழை நீர் தேங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதிகளிலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 30 செ.மீ. மழை பொழிந்தும் கூட பாதிப்பு இல்லை. மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும் மக்கள் நல்வாழ்வு துறையும் ஒன்றிணைந்து சென்னையில் 200 மருத்துவ சிறப்பு முகாம்களை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.
No comments:
Post a Comment