‘கோ பேக் மோடி’ குஜராத்திலும் டிரெண்ட்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

‘கோ பேக் மோடி’ குஜராத்திலும் டிரெண்ட்!

 நரேந்திர மோடி, தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்குச் செல்லும் போது, ‘மோடியே திரும்பிப் போ ’ எனப் பொருள்படும் ‘கோ பேக் மோடி’ (#Go_Back_Modi)  முழக்கம் டிரெண்ட் ஆவது வழக்கம்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் ‘கோ பேக் மோடி’ (#Go_Back_Modi) டிரெண்ட் ஆகி பா.ஜ.க.-வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மோடி வருகை! 

மோர்பி தொங்குபால விபத்தில் 142 பேர் பலியான துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் குறிப்பை வெளியிட்டு, நிவாரண இழப்பீட்டையும் அறிவித்தார். மேலும், குஜராத்தில் தனது பிரச்சார நிகழ்வுகளையும் முழுமையாக ரத்து செய்தார். 2 நாட்கள் கழித்து செவ்வாயன்று (1.11.2022) மாலை பிரதமர் மோடி குஜராத்திற்கு வந்தார். சம்பவ இடத்திற்கும் மருத் துவமனைக்கும் நேரில் சென்றார். அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். 

இதனிடையே, மோடி வருகையையொட்டி மருத்துவமனையை அலங்காரப்படுத்தும் வேலையை குஜராத் பா.ஜ.க. அரசு துவங்கியது   இந்த அலங்காரப் பணிகள் முடிந்தபிறகே மோடி மருத்துவமனைக்கு வருவார் என்ற செய்திகள் குஜராத் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் கொதித்துப் போன அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்தனர். தங்களைப் பார்க்க பிரதமர் மோடி வரவேண்டாம் என்று செவ்வாயன்று திடீரென (Go_Back_ Modi)  என்ற ஹேஷ்டேக்கை சமூக வலை தளங் களில் டிரெண்ட் ஆக்கி எதிர்ப்புத் தெரிவித்தனர். 

பிரதமர் வருகையையொட்டி நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வண்ணம் பூசும் பணிகள் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள்‘கோ பேக் மோடி’ முழக் கத்தைக் கையில் எடுத்தனர். வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் நாட்டை விற்பதில் கவனம் செலுத்தினால் மோர்பி தொங்குபால துயரச் சம் பவங்கள்தான் நடக்கும் என்றும் கண்டனங்களை பதிவிட்டனர்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க.வினர், நிலைமையைச் சமாளிக்க‘பிரதமர் மோடியுடன்தான் குஜராத் இருக்கும்’(GujaratWithModiJi) என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்துள்ளனர். எனினும் முதன்முறையாக குஜராத்திலும் அதுவும் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் ‘கோ பேக் மோடி’ என்ற முழக்கம் டிரெண்ட் ஆனது, தேசிய அளவில் பா.ஜ.க. தலைவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது.


No comments:

Post a Comment