மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் ஒன்றிய பகுதியில் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிட இயக்க ஆளுமையாக வலம் வந்தவரும், செம்பையில் தந்தை பெரியார் சிலை அமைய முக்கிய காரணமாக இருந்தவரும் - கழக போராட் டங்கள், நிகழ்ச்சிகள் அனைத்திலும் தொடர்ந்து பங்கேற்று வந்தவருமான பெரியார் தொண்டர் மானமிகு கட்பீஸ்
மா.கிருட்டினமூர்த்தி (வயது 79) அவர்கள் சிறிது காலம் உடல் நலிவுற்றிருந்த நிலையில் நேற்று (9.11.2022) இரவு 12.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
செம்பனார் கோயில் வட்டாரத்தில் பொது நலப் பணிகளில் முன்னணி வீரராக, அனைத்துத் தரப்பினருக்கும் தோழராகப் பணியாற்றிய கருஞ்சட்டை வீரர் 'கட்பீஸ்' என்று அன்பாக அழைக்கப்பட்டவர்.
அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவர்தம் வாழ்விணையர் ஜெயம் மற்றும் மகன்கள், மகள்களுக்கும், நண்பர்களுக்கும், கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment