சென்னை, நவ. 28- சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம் பரம்பாக்கம் நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீரை குடி நீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினசரி ஆயிரம் மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பருவமழை காரணமாக 600 இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது.
தொடர்ந்து நடந்து வரும் பணியில் இதுவரை 24 ஆயிரத்து 520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது.
பாதுகாப்பான குடிநீர் வழங் கும் வகையில் கீழ்ப்பாக்கம், சூரப் பட்டு, செம்பரம்பாக்கம், புழல், வீராணம் நீரேற்று நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் வினியோக நிலையங்களில் 11 டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வரு கிறது. இதுதவிர 12 லட்சம் குடியி ருப்புகளுக்கு இதுவரை 10 லட்சத்து 40 ஆயிரம் குளோரின் மாத்திரை கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமலிருக்க குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது
பொதுமக்களும் குடிநீரை காய்ச்சி பருகுவதுடன், தேவைக்கு அதிகமாக சேமித்து வைக்க வேண்டாம். குடிநீர் சேமிக்கும் பாத்திரங்கள், டிரம்கள், மேல் நிலை, கீழ்நிலை நீர்த்தேக்க தொட் டிகள் ஆகியவற்றை முறையாக சுத் தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். பருவமழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க பொது மக்களும் குடிநீர் வாரியத்துக்கு ஒத் துழைப்பு நல்க வேண்டும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment