சென்னை, நவ.28 சீனாவை தவிர மற்ற நாடுகளில் கரோனா தொற்று பூஜ்ஜிய நிலையை நோக்கிச் சென்று கொண்டி ருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திமுக இளைஞர் அணி செயலாள ரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப் பேரவை உறுப்பின ருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நேற்று (27.11.2022) கொண்டாடப்பட் டது. இதையொட்டி, சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நடந்த மெகா மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய வர்கள் பயன்பெறும் வகையில் நலத் திட்ட உதவிகள் வழங்கி, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டா டப்பட்டு வருகிறது. அமைச்சர் ஆவதற் கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. அவர் அமைச்சரானால் மிகவும் மகிழ்ச்சி என்றார்.
மேலும், இந்திய விமான நிலை யங்களில், கடந்த வாரம் வரை முகக் கவசம் அணிவது கட்டாயமாக இருந் தது. தற்போது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா வில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஊரடங்கை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின் றனர். அந்த நிலை மற்ற நாடுகளில் இல்லை. பல நாடுகளில் முகக் கவசம் அணிவதில் விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. கரோனா பரிசோதனை செய்வது, பாதிப்புகளை கணக்கெடுப்பது நிறுத் தப்பட்டுள்ளது.இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்த அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித் தாலும், மற்ற நாடுகளில் கரோனா தொற்று பூஜ்ஜிய நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனினும், முகக் கவசம் அணிவது பாதுகாப்பானது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 1.57 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 1,800 அரசு, தனியார் மருத்துவமனைகளில் 1,513 நோய்களுக்கு முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு மா.சுப்ரமணியன் கூறினார்.
சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் (5 கி.மீ.) ஓட்டம் நேற்று (27.11.2022) காலை நடந்தது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.மு.நாசர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்து, மாரத்தானில் பங் கேற்று ஓடினர். துறை இயக்குநர் செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment