கல்வி நிறுவனங்களில் பயிற்சிப் பேராசிரியர் : யுஜிசி உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

கல்வி நிறுவனங்களில் பயிற்சிப் பேராசிரியர் : யுஜிசி உத்தரவு

புதுடில்லி, நவ. 16- நாடு முழு வதும் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நேற்று (14.11.2022) ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பொறியியல், அறிவி யல் உட்பட பல துறை களில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் பங்கு அவசியமாகிறது. இதுபோன்ற நிபுணர் களை கல்வி நிறுவனங்க ளில் பயிற்றுநர்களாக நியமிக்க வசதியாக ‘பயிற்சிப் பேராசிரியர்’ என்ற புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிபுணர்கள் நியமிப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப் பட்டுள்ளன. அதைப் பின்பற்றி நியமனம் செய்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம்.

இதற்கேற்ப, கல்வி நிறுவனங்கள் தங்களு டைய பணியாளர் நிய மன விதிமுறைகளில் உரி யதிருத்தங்களை செய்து கொள்ளலாம். இது தொடர்பாக மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கை களை, கல்வி நிறுவன செயல்பாடுகளை கண்கா ணிக்கும் யுஜிசி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment