அரசமைப்பு சட்டத்தை மிஞ்சிய அதிகாரம் தனக்கு இருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் காணும் கனவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

அரசமைப்பு சட்டத்தை மிஞ்சிய அதிகாரம் தனக்கு இருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் காணும் கனவு

காளீஸ்வரம் ராஜ்

கேரள ஆளுநர் அலுவலகம் அண்மையில் பதிவு செய்த டிவி;ட்டர் செய்தி ஒன்று, அனைத்து தவறான காரணங்களுக்காகவும் நாடு தழுவிய கவனத்தை ஈர்த்தது. "ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் அளவில் தனிப்பட்ட அமைச்சர்கள் அறிக்கைகளை வெளியிடுவதால் அவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதற்கான  ஆளுநரின் விருப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது. அத்தகைய அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று மட்டும் அதில் கூறப்படவில்லை. ஆனால், அரசமைப்பு சட்டத்தின் 164(1) பிரிவின்படி பார்த்தால், "ஆளுநர் விரும்பும் வரைதான் அமைச்சர் பதவியில் நீடிக்க இயலும்" - என்பது தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மாநில நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கான ஆளுநரின் விருப்பத்தை இழந்துவிட்டபடியால், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்ட கடிதம் ஒன்று கேரள முதலமைச்சருக்கு மறுநாள் அனுப்பப்பட்டது. முதலமைச்சர்  அவ்வாறு நடவடிக்கை மேற்கொள் வதற்கு மறுத்துவிட்டார்.

அரசியல் மற்றும் அரசமைப்பு சட்ட கண்ணோட்டங்கள்

இதற்கு முன் எப்போதுமே நடந்திராத, மிகுந்த வியப்பளிக்கும் ஆளுநரின் இந்த செயல்பாடு பன்முக அரசியல் மற்றும் அரசமைப்புக் கண்ணோட்டங் களைக் கொண்டிருப்பதாகும். அதற்கிடையில், மாநில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் சிலரை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை ஆளுநர்  மேற்கொண்டார். அவர்களது நியமன நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டும் ஆளுநர், பல்கலைக் கழக வேந்தர் என்ற தனது அதிகாரத்தின் கீழ் இந்த நடவடிக்கையைத் தான் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள்மீது  இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தனி அதிகாரம் எதுவும் ஆளுநருக்கு இல்லை. அரசமைப்பு சட்ட எல்லைகளுக்கு உள்ளேதான் அவர் செயல்பட இயலும்.

நியமனம் செய்யப்படும் ஆளுநரின் செயல் பாடுகள் எப்போதும் தேர்ந்து எடுக்கப்படும் அரசின் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவையாகவே இருக்க வேண்டுமே அல்லாமல், அவற்றிற்கு எதிராக இருக்கக் கூடாது. இந்திய அரசமைப்பு சட்ட ஜன நாயகத்தின் செயல்பாட்டு கோட்பாடாக அது இருப்ப தாகும். அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனை கூறி உதவ வேண்டும் என்று அரசமைப்பு சட்ட   163(1) ஆவது பிரிவு கூறுகிறது. அரசமைப்பு சட்டத்தில் அனுமதித்துள்ளது போல, சில குறிப்பிட்ட விவ காரங்களில் தனது உசிதம் போல ஆளுநர் செயல்பட இயலும் என்று 163 (2) ஆவது பிரிவு தெரிவிக்கிறது. அவ்வாறு செயல்படுவதற்கான நியாயமான ஒரு காரணம் இருக்கும்போது மட்டுமே அவ்வாறு செயல்பட இயலும் என்றும், மற்றபடி பொதுவாக அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்தான் ஆளுநர். இந்த அரசமைப்பு சட்டவிதிகளைப் பொறுத்த வரை, ஆளுநரின் டிவிட் செய்தி மற்றும் கடிதத்தை வைத்துப் பார்க்கும் போது, அரசமைப்பு சட்ட 164 ஆவது பிரிவை 163 ஆவது பிரிவிலிருந்து தனியாகப் பிரித்துக் காண முடியாது. அதனால், ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு முதல் அமைச்சரோ அல்லது அமைச்சரவையோ பரிந் துரைக்காமல். குறிப்பிட்ட அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு தனது விருப்பத்தை விலக்கிக் கொள் வதன் மூலம் ஆளுநரால் ஓர் அமைச்சரை பதவி நீக்கம் செய்யமுடியாது. 

இது பற்றி நீதியாளர் எச்.எம்.சீர்வை அளித்த ஒரு விளக்கத்தில், "163(1) பிரிவின்படி ஆளுநருக்கு இத்தகைய அதிகாரம் அனைத்து விவகாரங்களிலும் அளிக்கப் பட்டிருந்தால், சில விவகாரங்களில் மட்டும் அந்த அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுக்கான தேவையே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதி மன்ற அரசமைப்பு சட்ட அமர்வு,  ஷம்சேர் சிங் - பஞ்சாப் மாநில அரக்கு இடையேயான வழக்கில் 1974 இல் அளித்த தங்களது தீர்ப்பில் 164 ஆவது சட்டப் பிரிவுக்கு ஒரு ஜனநாயக முறைப் படியான விளக்கத்தில், 1948 நவம்பர் 4 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின் முன்னுரையில்,  

"அமெரிக்க நாட்டின் செயலாளர்கள் (அமைச் சர்கள்) வழங்கும் ஆலோசனைகள் பொதுவாக அமெரிக்க அதிபர் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இ;ந்திய ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவர், பொதுவாகவே அமைச்சர்களின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். எந்த அமைச்சரையும் எந்த நேரத்திலும் அதிபரால் பதவி நீக்கம் செய்ய இயலும்.  நாடாளு மன்றததில் அறுதிப் பெரும்பான்மை இருக்கும் வரை இந்திய குடியரசுத் தலைவரால்; அவ்வாறு அமைச்சர்களையோ அமைச்சரவை யையோ பதவி நீக்கம் செய்ய இயலாது." இதே வழிமுறைதான் ஆளுநர்களுக்கும் பொருந்தும். ஒன்றிய அரசின் அமைச்சர்களும் கூட, அரசமைப்பு சட்ட 75 (2) ஆவது பிரிவின்படி, குடியரசுத் தலைவர் விரும்பும் காலம் வரை மட்டுமே பதவியி;ல் இருக்க முடியும்.

ஆளுநரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி, அமைச்சரவையின் ஆலோசனை இன்றி, பதவியில் அமைச்சர் நீடிப்பதற்கான ஆளுநரின் விருப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள இயலும் என்பது ஒரு தவறான கருத்தாகும்.

குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் பதவிகள் அடையாள அதிகாரச் சின்னங்களே ஆகும்.

164 (1) பிரிவின் உண்மையான அரசமைப்பு சட்ட அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அந்த விதியை வரலாற்று அடிப்படையில் படிக்க வேண்டும். 1947 ஆவது ஆண்டில் அரசமைப்பு சட்ட ஆலோசகரால் தயாரிக்கப் பட்ட அரசமைப்பு சட்ட வரைவின்  126ஆவது பிரிவு கூறுவதாவது : -

"ஆளுநரால் அழைக்கப்பட்டு நியமிக்கப்படும் முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச் சர்கள், ஆளுநர் விரும்பும் வரை பதவி வகிப்பார்கள்".

அரசமைப்பு வரைவு சட்டத்தின் முந்தைய 144 ஆவது பிரிவு அரசமைப்பு சட்ட - சட்டமன்றத்தால் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்து விவகார அதிகாரங் களும் நீக்கப்பட்டு, ஆளும் அதிகாரம் அமைச் சரவைக்கே அளிக்கப்பட்டது. அந்த 144 ஆவது பிரிவுக்கான திருத்தம் அம்பேத்கரால் முன்மொழி யப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு.  தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பு சட்டத்தின் 163, 164 பிரிவுகளாக விளங்குகின்றன.

அப்போது பேசிய அம்பேத்கரின் பேச்சைக் குறிப்பிட்டு, சுவாஷ் சி.காசியப் என்ற மேதை  "விரும்பும் காலம் வரை" என்ற சொற்கள் பெரும் பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த அமைச்சரவை நீடிக்கக் கூடாது என்ற அர்த்தத்தையே பொதுவாக தருவதாகும். அப்போது ஆளுநர் தனது விருப்பத்தைப் பயன்படுத்தி, அமைச்சரவையை உடனே பதவி நீக்கம் செய்து விடுவார். அதனால், இந்த அரசமைப்பு சட்டப் பிரிவு, ஆளுநர் ஒரு அதிகார அடையாளச் சின்னம் எனறே பொருள் தருவதாகும். அமைச்சரவைக்கு அறுதி பெரும்பான்மை இருக்கும் போது, ஆளுநரால் அதற்கு எதி;ராக செயல்பட இயலாது" என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கவலையைத் தீர்ப்பது பற்றி;

ஆளுநர் பதவி ஆங்கிலேய காலனி ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்டது. ஒரு தலைமை ஆளுநர் (கவர்னர் ஜெனரல்) தலைமையின் மேற்பார்வையில் ஆளுநர் பதவிகள் 1858 ஆம் ஆண்டு இந்திய சட்டத் தால் உருவாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்ட 1935 ஆம் ஆண்டு சட்டம் 1937 ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியன்று நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படியும், மாகாண அரசுகளின் ஆலோசனையின் படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும்.

ஆங்கிலேய காலனி ஆட்சியால் உருவாக்கப்பட்ட இந்த ஆளுநர்களின் பதவிகளால் விளையக் கூடிய ஆபத்து பற்றிய கவலை அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு இருந்தது. அது பற்றிய விவாதத்தின் போது, "ஆளுநர்களால் அதிகாரம் தவ றாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் இருக்கிறதா?" என்று பி.எஸ். தேஷ்முக் கேட்டார். அப்போது ஒரு முக்கிய உறுப்பினர் "ஆளு நர்களின் பேரறிவும், அவர்களை நியமிப்பவர்களின் பேரறிவும்தான் உத்தரவாதம்" என்று கூறினார்.

ஆனால், அரசமைப்பு சட்டத்தின் இந்த விருப்பம் நீதியுடன் கூடிய உண்மை செயல்பாட்டு நிலையாக மாற்றம் செய்யப்பட வேண்டிய பணியை உச்சநீதி மன்றம் செய்தது. தனக்கே உரித்தான பாணியில் நீதிபதி கிருஷ்ணய்யர் ஷம்சேர் வழக்கின் தீர்ப்பில், அரசமைப்பு சட்டத்தை மீறிய அதிகாரங்கள் தங் களுக்கு இருக்கிறது என்ற ஆளுநர் மாளிகைகளின் கனவைப் பற்றிய கவலைக்கு ஒரு மிகச் சரியான பதில் அளித்தார்.

குடியரசுத் தலைவருக்கும், மாநில அளவில் ஆளுநர்களுக்கும் அளிக்கப்படும் அனைத்து அதி காரங்களின் நோக்கமும், அத்தகைய அதிகாரங்களும், அவர்களின் கடமைகளும் அரசமைப்பு சட்டப் பிரிவுகளில் தெளிவாக எழுதப் பட்டுள்ளன. என் றாலும், அவை அனைத்தும், சட்டமன்ற உறுப்பினர் களுக்கும் அவைக்கும் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ள அமைச்சரவையின் மூலமாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில்தான் நமது ஜனநாயக நடைமுறையின் வெற்றியே அடங்கி உள்ளது. நமது அரசியல் கட்டமைப்பின் அடிப் படைகளுக்கு ஏற்றது போல அல்லாமல், ஒரே ஒரு தலைவரிடம் அனைத்து அதிகாரங்களையும் ஒப் படைத்துவிட்டு அவரை தெய்வ நிலைக்கு உயர்த்தி துதி பாடுவது இருக்கக் கூடாது."

அதனால், கேரள ஆளுநரின் டிவிட்டர் செய்தி மற்றும் அவரது கடிதம் பற்றிய நிலைப்பாட்டில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுதான் முடிவு செய்ய வேண்டும்.

நன்றி: 'தி இந்து' 31.10.2022

தமிழில் : த.க. பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment