போர்-ஆட்டம்!
* ஆவின் பால் விலை உயர்வு. தமிழ்நாடு முழுவதும் பி.ஜே.பி. போராட்டம்.
- அண்ணாமலை
>> பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107 ஆம் இடத்திலும், வறுமைக் குறியீட்டில் 85 ஆம் இடத்திலும் இந்தியா இருக்கிறதே - இவற்றை எதிர்த்து எப்போது போராட்டம்?
வெற்றி யாருக்கு?
* 10% இட ஒதுக்கீடு பிரதமரின் சமூகநீதிக்கு, லட்சியத்துக்குக் கிடைத்த வெற்றி.
- பி.ஜே.பி. வரவேற்பு
>> எந்த சமூகத்தின் வெற்றி?
யாரை ஏமாற்ற?
* மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்கத்தான் கருநாடகா பள்ளிகளில் 10 நிமிடம் தியானமாம்.
>> 10 நிமிடம் போக, மீதி நேரங்களில் செல்போனைப் பயன்படுத்தலாமா?
ஆடத் தெரியாதவருக்கு
முற்றம் கோணல்
* மம்தா கலந்துகொண்டதால் இல.கணேசன் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வில்லை.
- பி.ஜே.பி. அண்ணாமலை
>> கோஷ்டி மோதல் என்று சொல்லலாமா?
சூட்சமம்!
* நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. தலைமையில் மகாகூட்டணி!
- எடப்பாடி பழனிசாமி
>> பி.ஜே.பி.யோடு இணைந்தா?
குறட்டை ஒலி கேட்கலியா?
* இமாச்சலப் பிரதேசத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு.
- பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை
>> நாடாளுமன்றத்தில் குறட்டை விடும் மசோதா என்னாச்சு?
No comments:
Post a Comment