சென்னை, நவ.18 சென்னையில் உள்ள சவீதா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் நிறுவனத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா, 17.11.2022 அன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஜப்பான் தூதரகத் தின் துணைத் தூதர் டாகா மசாயூகி மாணவர்களிடையே வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சவீதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் என். எம். வீரையன், கடந்த ஓராண் டில் இக்கல்வி நிறுவனம், ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையில் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளையும், கடந்த பல ஆண்டு காலக் கனவுகள் நனவாகி வருவதையும் தன் பேச்சில் குறிப்பிட்டார். கடந்த ஆண்டில் இப்பல்கலைக்கழகம் பெற்ற விருதுகள், வெளியிட்ட பதிப்புகள், கையெழுத்திட்ட இணைவுகள், வருகை தந்த பெருமைமிகு வருகையாளர்கள், மாணவர்களின் அசத்தல் செயல்பாடுகள், வளாக நேர்காணல்களின் மூலம் மாணவர்கள் பெற்ற வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளையும் குறிப்பிட்டார்.
மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், பிசியோ தெரபி, சட்டம், நிர்வாகம், அலைடு ஹெல்த் சயின்சஸ், பிசிக்கல் எஜூகேஷன் ஆகிய துறைகளைச் சேர்ந்த 684 மாணவர்களுக்கு இவ்விழாவில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment