சென்னை, நவ. 17- வரும் நவம் பர் 24ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ட்ரைடன்ட் ஹோட்ட லில் சுவீடன் கல்வி கண் காட்சி நடைபெறவுள்ளது.
சுவீடன் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழு வின் ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் இந்த கல்வி கண்காட்சியின் மூலம் சுவீடனில் படிப்பதற்கான தங்கள் விருப்பங்களை ஆராய சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்த கண்காட்சியில் பங்குபெறும் இந்திய மாணவர்கள், குறிப்பாக இளங்கலை பட்டதாரி கள், சுவீடனில் மேம்பட்ட படிப்பைத் தொடர பல்வேறு வாய்ப்புகளை ஆராயலாம். கேடிஎச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற் றும் ஜான்கோபிங் பல் கலைக்கழகம் போன்ற முன்னணி சுவீடன் பல் கலைக்கழகங்களின் பிரதிநிதிகளிடமிருந்து மாணவர்கள் தங்களுக்கு தேவையான இலவச ஆலோசனை அமர்வு, உதவித்தொகை, விசா வாய்ப்புகள் மற்றும் ஸ்வீடனில் மாணவர் வாழ்க்கை பற்றியதகவல் களை நேரடியாக பெற லாம்.
இந்தியாவில் உள்ள சுவீடன் தூதரகம், புது டில்லியில் உள்ள அறிவி யல் மற்றும் கண்டுபிடிப்பு அலுவலகம் மற்றும் நார் டிக் சென்டர் இந்தியா ஆகியவை இணைந்து இந்த கல்வி கண்காட் சியை ஏற்பாடு செய்துள் ளன. இந்த கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த மேனாள் சுவீடன் மாண வர் கூட்டமைப்பும் பங் கேற்கிறது, இதன் மூலம் சுவீடனில் கல்வி பயில விரும்பும் இந்திய மாண வர்கள், முன்னாள் சுவீ டன் மாணவர் கூட்ட மைப்பினருடன் இணைந்து செயல்படமுடியும்.
No comments:
Post a Comment