கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை அனுமதிக்கக் கூடாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை அனுமதிக்கக் கூடாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை,நவ.25- உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த முத்துமுருகன்,  தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டதாவது, “திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன் - குறத்தி ஆட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் முன்பு புராணக் கதைகள், நீதிக் கதைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. சமீபகாலமாக குறவன்- குறத்தி ஆட்டத்தில் ஆபாச நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகளவில் இடம் பெறுகின்றன. எனவே, ஆபாசமான முறையில் குறவன் - குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்தும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆபாச குறவன் - குறத்தி ஆட்டங்களை நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், பல ஆடல், பாடல் குழுவினர் குறவன் - குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக தெரிய வருகிறது. அதற்கு அனுமதிக்கக் கூடாது. எந்த சமூகத்தினரும், யாராலும் அவமதிக்கப்படக் கூடாது. எனவே, குறவன்- குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதைத் தடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்புவது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ஆகியோரிடம் விளக்கம் பெற்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 1-க்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


No comments:

Post a Comment