பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தின் மருந்தாளுநர் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தின் மருந்தாளுநர் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி

திருச்சி, நவ. 11- மருத்துவப் பணிக ளுக்கான தேர்வாணையம் 889 மருந்தாளுநர் பணியிடங்களுக் கான அறிவிப்பினை வெளியிட் டுள்ளது. அதற்கான நேரடி இல வச பயிற்சி மாவட்ட வேலை வாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தின் சார் பில் பெரியார் மருந்தியல் கல் லூரியில் தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெறவிருக்கின் றது. 

இப்பயிற்சிக்கான துவக்க விழா 01.11.2022 அன்று காலை 10 மணியளவில் கல்லூரி அரங் கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல் வன் வரவேற்புரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தமது வாழ்த்துரை யில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்று போராடிய அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் பெயரில் அமைந் துள்ள இக்கல்லூயில் அரசு சார்பிலான பயிற்சி வகுப்பினை நடத்துவதற்கு வாய்ப்பினை வழங்கிய மாவட்ட வேலை வாய்ப்பு மய்யத்திற்கு நிர்வாகத் தின் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவித்து போட்டித் தேர்வில் பங்கு பெறும் மருந்தாளுநர்க ளுக்கு துறை சார்ந்த வழிகாட் டுதல்களை வழங்கினார். 

சிறப்புரை

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மய்யத்தின் மண்டல இணை இயக்குநர் சந்திரன் பயிற்சி வகுப் பினை துவக்கி வைத்து சிறப்பு ரையாற்றினார். அவர் தமது உரையில் அரசுத் துறையில் முதன் முதலில் மருந்தாளுநர்களுக்கான பயிற்சி வகுப்பினை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திறமை வாய்ந்த பெரியார் மருந் தியல் கல்லூரியின் பேராசிரியர் கள் கலந்து கொண்டு வகுப்புக் களை எடுக்க உள்ளனர் என்றும் மருந்தியல் துறைக்கான மிகப் பெரிய கலைஞர் கருணாநிதி நூலகமும் இங்கு பயிற்சி பெறு வோருக்கு வசதியாக அமைந்துள் ளது என்றும் உரையாற்றினார்.  மேலும் இத்தகைய அரிய வாய்ப் பினை மருந்தாளுநர்கள் பயன் படுத்திக்கொண்டு வெற்றிபெற வேண்டும். மாவட்ட வேலை வாய்ப்பு மய்யம் வழங்கக்கூடிய பயிற்சியினை மேற்கொண்டவர் கள் அதிகம் தேர்வாகி சாதனை படைக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். 

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மய்யத்தின் இணை இயக்குநர் மகாராணி போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ளும் அனைவருமே தேர்ச்சி பெறுவ தில்லை. தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு மற்றும் கொண்ட இலக்கை அடைய வேண்டும் என்ற மனஉறுதி இருப்பவர்கள் மட்டுமே வெற்றி யடைய முடியும். அத்தகைய வெற்றியாளர்களாக பெரியார் மருந்தியல் கல்லூரி பயிற்சி மய் யத்தில் இணைந்துள்ளவர்கள் உருவாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரி யர் முனைவர்  அ.மு. இஸ்மாயில், வேலைவாய்ப்பு  மய்யத்தின் இளம் தொழில்நெறி வழிகாட்டு நர் நாகலட்சுமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ் ணமூர்த்தி நன்றியுரையாற்ற துவக்கவிழா இனிதே நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து இப்பயிற்சி மய்யத்தில் பதிவு செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 90 மருந்தாளுநர்கள் இந்நிகழ்ச் சியில் கலந்து கொண்டு பயிற்சி பெறவுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment