திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாட்டி-தாத்தா தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாட்டி-தாத்தா தினம்

திருச்சி, நவ. 6- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவில் 04.11.2022 அன்று காலை 10.30 மணியளவில் பாட்டி தாத்தா தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதலில் தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த விழாவில் மழலையர் பிரிவு சார்பில் மாணவி சிறீசவுந்தர்யா வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக முதலாம் வகுப்பு மாணவ மாணவியர் நடனம் ஆடியும், எல்.கே.ஜி மாணவி பிரகதி பாட்டி தாத்தா பாடலை தன் மழலை குரலில் பாடியும், யு.கே.ஜி மாணவ மாணவியர் நடனம் ஆடியும் பாட்டி தாத்தாக்கள் நிரம்பிய அரங்கை அதிர வைத்தனர்.

பாட்டி தாத்தா வேடமிட்ட குட்டி பாட்டி தாத்தாக்கள் மேடையை வலம் வந்தனர். பின்னர் அவரவர் பேரக் குழந் தைகளின் கரங்களளில் நினைவுப் பரிசை வழங்கி அவர்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். தாத்தா பாட்டிகள் மேடையில் ஆடியும் பாடியும் தங்கள் பேரக்குழந்தைகளை மகிழ்வித்தனர்.

நிகழ்வின் நிறைவாக முதலாம் வகுப்பு மாணவி வித்யாசிறீ நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் மறக்க முடியாத விழாவாக இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment