சென்னை, நவ.18 பெண்கள் தொழில்முனைவோர் நாள் 19.11.2022 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள பெண் தொழில் முனை வோரின் சாதனைகளைக் கொண்டாடுவதுடன் பெண் களை தொழில்முனைவோராக ஊக்குவிக்க பெரிதும் முயற்சிக்கிறது.
பெண்கள் தொழில்முனைவோர் நாள் குறித்து வாத்வானி அறக்கட்டளையின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைமை இயக்க அதிகாரி சஞ்சய் ஷா கூறுகையில், “பெண்கள் எப்போதுமே நமது சமூகத்தின் முதுகெலும்பாக இருந்திருக்கிறார்கள், பெண்களின் தொழில்முனைவு வணிகச் சூழலை மேம்படுத்துகிறது மற்றும் பிற பெண்களுக்கு ஒரு முன் மாதிரியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. 2030ஆம் ஆண்டுக்குள், அதிகரித்து வரும் பெண் தொழில்முனைவோர் பங்கேற்புடன் இந்தியா தனது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 700 பில்லியன் டாலர்களை சேர்க்கும் மற்றும் இதன் மூலம் 150 முதல் 170 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகும் சாத்தியம் உள்ளது". என்று கூறினார்.
இந்த அறக்கட்டளையின் நிர்வாக துணைத் தலைவர் ராஜீவ் வாரியர் கூறுகையில், “பெண்கள் சுயமாக தொழில் தொடங்கவும் வளரவும் ஆதரவு பெற்றால், அது அவர்களுக்கும் அவர்களது குடும்பங் களுக்கும் மட்டுமல்லாமல் மொத்த சமூகத்துக்கும் மற்றும் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும். இந்த அறக்கட்டளை மற்றும் தேசிய தொழில்முனைவோர் வலையமைப்பு ஆகியவை வணிகத்தில் பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவாக இருபது ஆண்டு களாக பணியாற்றி வருகின்றன” என்று கூறினார்.
No comments:
Post a Comment