தேவநேயப் பாவாணர் பேத்தி மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

தேவநேயப் பாவாணர் பேத்தி மரணம்

சென்னை,நவ.21- தேவநேயப் பாவாணாரின் பேத்தி பரிபூரணம்(வயது 57) முதுகுதண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்காக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அவர் நேற்று முன்னாள் இரவு (19.11.2022) உயிரிழந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (20.11.2022) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: "தம் வாழ்வையே தனித்தமிழ் இயக்கத்துக்காகத் ஒப்படைத் துக்கொண்டு பணியாற்றிய 'திராவிட மொழிநூல் ஞாயிறு' தேவநேயப் பாவாணர் அவர்களின் பேத்தி பரிபூரணம் அவர்கள் முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு மறைவெய்தினார் என்ற செய்தி யறிந்து வருந்துகிறேன். அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment