‘கடவுளர்‘ சிலை
‘கடவுளர்' சிலை கடத்தல் விவகாரத்தில் காவல் துறை மேனாள் அய்.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தியபோது அதில் முறைகேடுகள் நடந்ததாகவும், முக்கிய குற்றவாளியை தப்ப வைக்க முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ள புகார்கள் தொடர் பாக அவர் மீது சி.பி.அய். வழக்குப் பதிவு.
புழக்கம்
பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 6 ஆண்டுகளான பிறகும், மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாம்.
தடுப்பூசிகள்
மக்களிடம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட ஆர் வம் இல்லாத நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத் தில் 5 கோடி கரோனா தடுப்பூசிகள் வீணாகும் அவலம் நேரப் போவதாக தகவல்.
உயர்வு
மாநகராட்சி, நகராட்சி திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதிக்கான நிதி உச்ச வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு.
பிணைப்பத்திரம்
மருத்துவர்கள் படிப்பை முடித்தவுடன் குறிப்பிட்ட காலம் அரசுப் பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்து பிணைப்பத்திரம் வழங்கும் நடைமுறை முடி வுக்கு வருகிறது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தீவிர மாக ஈடுபட்டு வருகிறது.
No comments:
Post a Comment