பெரியர் மருந்தியல் கல்லூரியில் மேனாள் மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

பெரியர் மருந்தியல் கல்லூரியில் மேனாள் மாணவர்கள் சந்திப்புக்கூட்டம்

திருச்சி, நவ. 11- பெரியார் மருந்தியல் கல்லூரியில் மேனாள் மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் 05.11.2022 அன்று காலை 10.30 மணியளவில் நடை பெற்றது. பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந் தாமரை தலைமை வகித்த   இந்நிகழ்ச்சிக்கு மேனாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் முனை வர் த. சிறீ விஜய கிருபா வர வேற்புரையாற்றினார். பெரியார் மருந்தியல் மக ளிர் கல்லூரியாக திகழ்ந்த    இக்கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை இளநிலை மருந்தியல் பயின்ற மாண விகள் 38 பேரில் 21பேர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.  

மருந்தாளுநர், தொழில் முனைவோர்,  பேராசிரியர்கள், நிர்வா கத்தினர், தரக்கட்டுப் பாட்டு மேலாளர் என அரசு துறைகளிலும், உள் மற்றும் வெளிநாடுகளி லும் சிறப்பாக திகழக் கூடிய பெரியார் மருந்தி யல் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் தாங்கள் இந்நிலைக்கு உயர்ந்த மைக்கு பெரியார் மருந்தி யல் கல்லூரியும் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணு ரிமைச் சிந்தனைகளான துணிச்சல், தைரியம், தன் னம்பிக்கை போன்றவை கள்தான் என்றும் ஒருவர் பின் ஒருவராக நெகிழ்ச்சி யுடன் தெரிவித்தனர். 

மேலும் கல்வி பயிற்று வித்த பேராசிரியர்களுக் கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேனாள் மாணவர்கள் ரூ.25,000அய் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கி னர்.   பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மா யில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி, சோதனைக்கூட ஆய்வியல் துறைத் தலை வர் பேராசிரியர் க. உமா தேவி ஆகியோர் வாழ்த் துரை வழங்கிய இந்நிகழ்ச் சிக்கு மேனாள் மாண வர் சங்க செயலாளர் பேரா. இராஜேஷ் நன்றியு ரையாற்றினார். 

மேனாள் மாணவர் சங்க இணைச் செயலர் பேரா. சகிலா பானு, பேரா. எம்.அய். சம்சாத் பேகம் மற்றும் அ. ஷமீம் ஆகியோர் மேனாள் மாணவர்களுக்கான  கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளை யாட்டு போட்டி களை சிறப்பாக ஒருங்கி ணைத்தனர். மேனாள் மாணவர் சங்கத் தலைவர் முனைவர் சு. கற்பகம் குமர சுந்தரி மற்றும் பொருளாளர் பேரா. 

அ.ஜெயலட்சுமி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை யும் சிறப்பாக செய்திருந் தனர்.

No comments:

Post a Comment