மழைநீர் தேங்கிய இடங்களில் அடுத்த முறை தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் பி.கே.சேகர்பாபு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

மழைநீர் தேங்கிய இடங்களில் அடுத்த முறை தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை, நவ. 7 சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் அடுத்த முறை தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறினார். சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக் கான பருவகால மருத்துவ முகாமை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (6.11.2022) தொடங்கி வைத்தார். 

அப்போது மாநகராட்சி மேயர் பிரியா, உட்பட அதிகாரிகளும் உடனி ருந்தனர். அதன்பின்னர்  அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது

 இதுவரை மருத்துவ முகாமில் சென்னையில் 82,000 பேர் பயன் பெற்றுள்ளனர் .  சென்னையில் கடந்த ஆண்டு மழையின் போது நீரில் தத்த ளித்த இடங்களில் 80 விழுக்காடு-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆண்டு மழைநீர் தேங்கவில்லை. தற்போது மழைநீர் தேங்கிய இடங்களில் அடுத்த முறை தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு பெருமழையில் மக்களை பாதிப்பில் இருந்து முதலமைச்சர் காப்பாற்றியுள்ளார் . அதனால் அவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின் றனர். சென்னையில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவை ஏற்பட்டால் கூடுதல் மின்மோட்டார்கள் வரவழைக்கப் படும். நவ.9ஆம் தேதிக்கு பிறகு பெரு மழை பெய்தால் அதனை சமாளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக் கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட் டுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக் கப்பட்ட உபரிநீர் வீணாவதை தடுக்க சிக்கராயபுரத்தில் உள்ள குவாரியில் நீரை சேமிப்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். தேவையான இடங்களில் மின் மோட்டார்களை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒட்டேரி, கூவம் போன்ற இடங்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு கொசுவலை வழங்கும் பணி (7.11.2022)  தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment