அரியலூர், நவ.7- அரியலூர் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் அரியலூர் சிவக்கொழுந்து இல் லத்தில் 1.11. 2022 செவ்வாய் மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ் செல்வன் கடவுள் மறுப்பு கூற பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமை ஏற்க, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் அனை வரையும் வரவேற்றார்.
மண்டல தலைவர் இரா.கோவிந்தராஜன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன் பெரம் பலூர் மாவட்ட தலைவர் சி.தங்கராசு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மு.விஜயேந்திரன் அரியலூர் மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிய பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தமிழர் தலைவரின் 90ஆவது பிறந்த நாளை எழுச்சி யுடனும், உணர்ச்சியுடனும் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கியும், தமிழர் தலைவரின் சிறப்புகளை எடுத்துக் கூறியும், ‘விடுதலை' நாளேடு ஆற்றக்கூடிய பணிகளையும், அதற்கு சந்தா சேர்ப்பதன் கடமையையும், இயக்கப் பணிகளை தொய்வில்லாமல் தொடர்ந்து தெரு முனை கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்தி புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதன் அவசியத்தையும் விளக்கி உரையாற்றினார். செல்வக்குமார் நன்றி கூறினார். பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் அனைவருக்கும் இரவு உணவு வழங்கி சிறப்பித்தார்.
தீர்மானங்கள்
தந்தை பெரியாரின் பெரு நம்பிக்கையை பெற்றவரும் திராவிட இயக்கத்தின் ‘திருஞான சம்பந்தன்' என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட 80 ஆண்டுகால பொது வாழ்க் கைக்குச் சொந்தக்காரர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆவது பிறந்த நாளை டிசம்பர் 2 அன்று எழுச்சியுடன் நடத்தி கழக கொடியேற்றுதல் தெருமுனை கூட்டங்கள், கருத்தரங்கங்கள், மரக் கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதென ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகிறது.
தலைமைச் செயற்குழுத் தீர்மானங்களை ஏற்று சிறப்பாக செயல்படுத்துவது என முடிவு செய்யப் படுகிறது
இனமானம் காக்கும் கேடயமாம் ‘விடுதலை' நாளேட்டிற்கு அதிக அளவில் சந்தாக்களைச் சேர்த்து இலக்கினை நிறைவு செய்வது என முடிவு செய்யப்படுகிறது
திராவிடர் கழகத் தலைவரின் உயிருக்கு குறி வைக்கும் நோக்கோடு கேள்வி -பதில் என்ற பெயரில் ‘தினமலர்', ‘காலைக்கதிர்' என்ற பத்திரி கைகளில் விசத்தைக் கக்கியுள்ளனர். இதன்மூலம் தலைவர் வீரமணி அவர்களின் உயிருக்கு குறி வைக்கும் திட்டத்தோடு அவாள் இருப்பது தெரிய வருகிறது இவர்களை "தீர விசாரித்து" நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இக் கூட்டம் வற்புறுத்துகிறது.
புதிய பொறுப்பாளர்: அரியலூர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆ. இளவழகன்.
பங்கேற்றோர்
மாவட்ட அமைப்பாளர் இரத்தின. இராமச்சந் திரன், மாவட்ட துணைச்செயலாளர் மா.சங்கர், மண்டல இ.அ.செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திக்,.மாவட்ட இ.அ.து. தலைவர் வீராக்கன், திராவிட விஷ்ணு (திராவிட வித்து), மாவட்ட தொ.அ. தலைவர் சி.சிவக்கொழுந்து, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா.செல்வக்குமார், அமைப்பாளர் சி.கருப்புசாமி, சோ.க.சேகர், பெரம்பலூர் மாவட் டத்தைச் சார்ந்த ரெ.வேலாயுதம் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment