சென்னை, நவ.29- அயர்லாந் தில் உயர் கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அயர் லாந்து அரசாங்கம் சென் னையில், “எஜுகேஷன் இன் அயர்லாந்து’’ என்ற கல்விக்கண்காட்சியை நடத்தியது.
உயர்கல்விக்காக மாணவர்கள் பன்னாட்டு அளவில் தேர்வுசெய்யும் முதன்மையான நாடுக ளில் அயர்லாந்தும் ஒன் றாகும். இந்தியாவிலிருந்து குறிப்பிடத்தக்க மாண வர்கள் அயர்லாந்தில் உயர்கல்வி பயின்று வரு கின்றனர். சென்னையில் நடைபெற்ற கண்காட்சி யில் அயர்லாந்திலிருந்து 16 உயர்கல்வி நிறுவனங் கள் கலந்துகொண்டு சுமார் 450க்கும் மேற் பட்ட மாணவர்கள் மற் றும் அவர்களது பெற்றோ ருடன் கலந்துரையாடின.
இந்த கண்காட்சி குறித்து அயர்லாந்தில் கல்விக்கான இந்தியா மற்றும் தெற்காசியாவின் பிராந்திய மேலாளர் பேரி ஓ'டிரிஸ்கால், கூறு கையில்,
“பெருந்தொற்றுக்குப் பின்னர் முதல் கல்வி கண்காட்சியை மீண்டும் தொடங்கியிருப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அயர்லாந்தில் உள்ள படிப்புகள், வேலை வாய்ப்புகள், சலுகைகள் உட்பட மாணவர்கள் மற் றும் பெற்றோர்களுக்கான அனைத்து கேள்விகளுக்கு அயர்லாந்தின் முன்னணி கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக பதிலளிக்க இதுபோன்ற கண்காட்சிகள் பல வாய்ப்பை வழங்குகிறது.
இந்த கண்காட்சி வாயிலாக மாணவர்கள் தங் களின் எதிர்கால கல்வி குறித்த பயணத்தை தொடங் குதற்கும் அவர்கள் தங்களது வாழ்க்கையில் சிறப்பான வெற்றியைப் பெறவும் உதவுவதே எங் களது குறிக்கோள்,
மேலும் அவர்களின் பெரும்பாலான கேள்வி களுகு பதில் அளித்து சந்தேகங்களை போக்க முடிந்தது என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.
No comments:
Post a Comment