அய்தராபாத்,நவ.3- ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை நடைப்பயணம், அரசியல் சூழலை மாற்றும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கருநாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடைப் பயணம் முடித்த ராகுல், தெலங்கானா வில் தற்போது நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரும் 3,500 கி.மீ நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
அவர்களுடன் அய்தராபாத்தில் உள்ள போவன்பாலி என்ற இடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று (2.11.2022) கலந்துரை யாடினார். அதன்பின் அவர் ட்விட்ட ரில் அளித்துள்ள தகவலில், ‘‘ஒற்றுமை நடைப்பயணம் அமைதிப் புரட்சியை ஏற்படுத்துகிறது. இது நாட்டின் அரசி யல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும். ராகுலுடன் நடைப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள், கட்சித் தொண் டர்களுக்கு உற்சாகத்தை அளிப்பவர் களாக உள்ளனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment