வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

தமிழர் தலைவர் சிறப்புரை - எழுச்சியுடன் நடத்திட முடிவு

சென்னை, நவ. 18- வடசென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 16.11.2022 அன்று மாலை 6 மணிக்கு புதுவண்ணை, பெரியார் மாளிகை கழகக் கட்டடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கடவுள் மறுப்பு

கூட்டத்தின் தொடக்கமாக மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் சு.அரவிந்தகுமார் கடவுள் மறுப்புக் கூறினார். இக் கலந்துரையடல் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்றும், கூட்டத் தலைவரை முன்மொழிந்தும், வடசென்னை யில் தமிழர் தலைவர் கலந்து கொள்ள உள்ள பொதுக்கூட்டம் குறித்தும் வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு வொற்றியூர் இரா.சதீசுகுமார் குறிப் பிட்டார். திருவொற்றியூர் நகர கழக செயலாளர் ந.இராசேந்திரன் கூட்டத் தலைவரை வழிமொழிந் தார்.  வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வெ.மு.மோகன் கூட்டத்திற்குத் தலைமையும், துணைத் தலைவர் கி.இராமலிங்கம் முன்னிலையும் வகித்தனர்.

திருவொற்றியூரில் 

தமிழர் தலைவர்

26.11.2022 அன்று வடசென்னை - திருவொற்றியூர் பெரியார் நகரில், தந்தை பெரியார் சிலைக்கு அருகில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகி யோர் பங்கேற்கும் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை எழுச்சி யுடன் நடத்துவது குறித்து - -

மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் தி.செ.கணே சன், துணைத் தலைவர் கி.இரா மலிங்கம், துணைச் செயலாளர் சு.மும்மூர்த்தி, அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், திரு வொற்றியூர் நகர கழக செயலாளர் ந.இராசேந்திரன், புதுவண்ணை கழக செயலாளர் சு.செல்வன், பெரம்பூர் கழக செயலாளர் மங் களபுரம் ஆர்.பாசுகர், கண்ண தாசன் நகர் கழக செயலாளர் க.துரை, அமைப்பாளர் வி.இர விக்குமார், திருவொற்றியூர் பா. பாலு, வில்லிவாக்கம் சி.அன்புச் செல்வன், புதுவண்ணை வி.சீனி வாசன் மற்றும் பலரும் கழக ஆக் கப் பணிகள் குறித்துப் பேசினர்.

நிறைவாக சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால் தமிழர் தலைவர் 90ஆம் பிறந்த நாள் விழாவில் அளிக்கப்படவுள்ள ‘விடுதலை' சந்தாக்களை அனைத் துப் பெருமக்களிடமிருந்து பெறு வது குறித்தும், தமிழர் தலைவர் 90ஆம் ஆண்டு பிறந்த நாளை - ஆங்காங்கு தெருமுனைக் கூட் டங்கள் நடத்தி கொள்கைப் பிரச் சாரம் செய்வது குறித்து, குறிப் பிட்டு - நவம்பர் 26 நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திடுவது பற்றி எடுத் துக் கூறினார்.

பெருவாரியான கழகத் தோழர் கள் அந்நிகழ்வில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட் டுக் கொண்டார்.

எங்கும் கழகக் கொடிகள்

இப்பொதுக்கூட்டத்திற்கு ஆங்காங்கு சிறிய அளவில் விளம்பர தட்டிகள் அமைத்தும், கழகக் கொடிகளை ஏராளமாக நாட்டியும், பெரிய அளவுக்கு விளம்பரம் செய்தும், நல்ல முறை யில் ஒளி - ஒலி அமைத்து, மாநாடு போல் கழகத் தோழர்களும், பொதுமக்களும், பெருந்திரளாகக் கொள்ளும் வகையில் சிறப்புடன் பொதுக்கூட்டத்தை நடத்துவ தற்கு ஒத்துழைப்புத் தருவதாக கழகத் தோழர்கள் அனைவரும் குறிப்பிட்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

1. டிச. 2 - தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை தமிழர் பெருவிழா வாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், கழகக் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் என்று சிறப்பாகக் கொண்டாடுவதென தீர்மானிக் கப்படுகிறது.

2. 26.11.2022 அன்று திருவொற் றியூர் - பெரியார் நகரில் தமிழர் தலைவர் பங்கேற்கின்ற ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தை அனைத்துக் கட்சித் தோழர்களை யும் பங்கேற்கச் செய்வதோடு, மிகுந்த எழுச்சியோடு நடத்துவ தெனத் தீர்மானிக்கப்படுகிறது.

3. வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு சுங்கச் சாவடி (டோல்கேட்) அருகில் வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில், உணர்ச்சி பூர்வமான வரவேற்பை அளிப்ப தென்று தீர்மானிக்கப்படுகிறது.

நிறைவாக இளைஞரணி கழகத் தோழர் மு.மாணிக்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment