ஆதார் கார்டு இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு இரட்டை குழந்தைகள் - தாய் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

ஆதார் கார்டு இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு இரட்டை குழந்தைகள் - தாய் உயிரிழப்பு

பெங்களூரு, நவ. 4- கருநாடக மாநில திம்கூரில் தமிழ் நாட்டைச்சேர்ந்த பெண் வசித்து வந்தார். இவருக்கு பிரசவலி ஏற்பட்டதால் இவர் திம்கூரு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

ஆனால் அந்த மருத் துவமனையோ ஆதார் கார்டு இல்லை. கருநாடக அரசு கர் ப்பிணிகளுக்கு தரும் தாயி என்ற அடை யாள அட்டை இல்லை என்று கூறி அவரை அனு மதிக்கவில்லை. இந்த நிலையில் பெங்களூரு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என் றால் அதற்கான பணம் அவரிடம் இல்லை. 

 தாய் மற்றும் அவரின் 9 வயது சிறுமி மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர். மருத்துவரோ செவிலியரோ அவரை மருத்துவமனையில் சேர்க்க மறுத்துவிட்டனர். இரவு வெகுநேரம் ஆகி விட்டதால் அவர்கள் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு பிரசவ வலி அதிகமாகிவிட்டது, இந்த நிலையில் அதிக உதிரப்போக்கின் காரண மாக தாய் மரணமடைந் தார். தாயின் வயிற்றில் ஒரு குழந்தையும் மற்றும் அப்போது பிரசவித்த நிலையில் ஒரு குழந்தையும் மரணம் அடைந்தன. 

தாயின் வேதனையை யும் அவர் மரணமடைந்த தையும் 9 வயது சிறுமி பார்த்துக்கொண்டு ஒன் றும் செய்ய இயலாதவராக இருந்தார். 

ஒன்றியஅரசு கொண்டு வந்த அனைத்திற்கும் ஆதார் என்ற உத்தரவும் அதை நடைமுறைப்படுத் துவோம் என்று துளியும் இரக்கமில்லாமலும் இருந்த திம்கூரு மருத் துவமனை நிர்வாகத்தா லும் 3 உயிர்கள் பறிபோய் உள்ளன.

No comments:

Post a Comment