எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!

சென்னை,நவ.24- திமுக ஆட்சி மீது அவதூறு பரப்புவோருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் தங்கம்தென்னரசு செய்தி யாளர் களிடம் கூறியதாவது: 

கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை துரிதமாக விசாரணை நடத்தி 12 மணி நேரத்துக்குள் குற்றவாளி முபின் என கண்டு பிடித்தது. இந்த சம்பவத்தில் பன் னாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து, தேசிய புலனாய்வு முகமையிடம் இவ்வழக்கு விசா ரணை ஒப்படைக்கப்பட்டது.

அங்கொன்றும், இங்கொன்று மாக நடைபெறும் சில சம்பவங் களை வைத்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஒருமாயத் தோற்றத்தை, மாயா ஜால பிம்பத்தை உருவாக்க முற் பட்டுள்ளார். இது முற்றிலும் அபத்தமானது. சட்டம்-ஒழுங்கு குறித்து அதிமுகவினருக்கு பேச எவ்வித அடிப்படை தார்மிக உரி மையும் கிடையாது. கடந்த அதிமுக  ஆட்சியில்தூத்துக்குடியில் குருவிகளை சுடுவதைபோல 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சாத்தான் குளத்தில் காவல் நிலை யத்தில் தந்தையும், மகனும் இருவர் அடித் துக் கொல்லப்பட்டனர்.

உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சியில், நல்ல திட்டங்கள் மீது அதிமுகவுக்கு ஆர்வம் இருந் திருந்தால் தமிழ்நாடு அரசு சட்ட சபையில் இயற்றும் சட்டங்களை நிறைவேற்ற அவர்கள் ஆளுநரிடம் அழுத்தம் கொடுத்திருக்க வேண் டும். ஆனால், ஆட்சியின் மீது சேற்றை வாரிப் பூசும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அரசு மீது குற்றச்சாட்டு தெரிவித்தால் அதற்கு உரிய ஆதாரங்கள் இருந்தால் அதை தாராளமாக நீதிமன்றத்தில் வழக்காகத் தாக்கல் செய்யலாம். பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக செயல்பட வேண்டுமே தவிர, அடிப்படை ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு கூறக் கூடாது.

திமுக ஆட்சிக்கு மக்களிடத்தில் கிடைத்த நல்ல பெயரை அவர் களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவேதான் எவ் வித ஆதாரமும், முகாந்திரமும் இல் லாமல் சேற்றை வாரி இறைக்கின் றனர். 'ஆன்லைன் ரம்மி' விளை யாட்டை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் துக்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்காக சட்டத்துறை அமைச்சர் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இவ் வாறு தங்கம் தென்னரசு கூறினார்.


No comments:

Post a Comment