குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பாக பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டி சிறப்பாக நடந்தது. ஏராளமான மாணவர்கள் பங்கேற்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நாகர்கோவில் இரட்சணிய சேனை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மா.மு சுப்பிரமணியம் தலைமை தாங்கி நிகழ்ச்சியினை தொடங்கிவைத்தார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு இளைஞரணி தலைவர் இரா. இராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் பரிசுகளை வழங்கினார். வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகளாக மாவட்ட கழகம் சார்பாக பரிசுத்தொகை, பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சார்பாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், புத்தகங்கள் வழங் கப்பட்டன. பள்ளிகளுக்கு பெரியார் படம் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். ஜான்சன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். குமரி மாவட்டத்தில் போட்டி நடைபெற்ற பள்ளிகளில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
No comments:
Post a Comment