‘பத்திரிகையாளர் தினத்தையொட்டி' பார்ப்பன ஊடகங்களின் சமூக அநீதியைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

‘பத்திரிகையாளர் தினத்தையொட்டி' பார்ப்பன ஊடகங்களின் சமூக அநீதியைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

 சமூகநீதியின் ஆணிவேரையே வீழ்த்தும் திட்டமே ஒன்றிய அரசின் 103 ஆவது சட்ட திருத்தம்!

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதியை வீழ்த்தும் திட்டத்திற்கு ஊடகங்கள் துணைபோகலாமா?

இது ‘விழிப்புள்ள ஏகலைவன் யுகம்' என்பதை மறவாதீர்!

சமூகநீதியின் ஆணிவேரை அழிக்கும், சமூக அநீதிக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் 103 ஆவது சட்டத் திருத்தத்தை விழுந்து விழுந்து ஆதரிக்கும் ஊடகங்களை எச்சரித்து பத்திரிகையாளர் 

தினத்தையொட்டி  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நவம்பர் 16 ‘தேசிய பத்திரிகையாளர் தினம்' என்று அழைக்கப்படுகிறது.

பத்திரிகைகள், நாளேடுகள், வார ஏடுகள், மாத ஏடுகள், தொலைக்காட்சிகள் எவையானாலும் அந்த அச்சு ஊடகங்கள், உண்மையை உரக்கச் சொன்னால் மட்டுமே அவை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உண்மையில் மதிக்கப்படும்.

ஆனால், இன்றுள்ள நிலையில், ஏடுகள் - இந்த நான்காவது தூண் - யாருடைய பிடியில் உள்ளன?

கார்ப்பரேட் முதலாளிகளின் 

கைகளில் ஊடகங்கள்!

ஒரு சில  சிறு ஏடுகள், இதழ்கள் தவிர  மற்ற அத்தனை யும் கார்ப்பரேட் முதலாளிகளின் கடை வியாபாரம் - இது உரிமையாளர்களைப் பொறுத்தது.

ஆனால், அதில் பணிபுரிந்து ‘‘விஷய தானம்'' என்று ஆசிரியரின் தலையங்கம், செய்திகள், மற்ற ‘‘ஆசிரியர் கடிதங்கள்'' என்று அவர்களே தயாரித்து சில அநாமதேய ஆசாமிகளின் பெயரைப் போட்டு, சொந்த தயாரிப்பை கற்பனை கடை(த்தர)ச் சரக்குகளைப் பரப்புவதே அவர்களின் வேலையாக இருக்கிறது.

குறிப்பாக தமிழ்நாட்டிலும் சரி, வடபுலத்திலும் அவை உயர்ஜாதிப் பார்ப்பனர்களின் ஏகபோகமாகவே இருக் கின்றன!

இதை பல ஆண்டுகளுக்குமுன்பே அமர்த்தியாசென் போன்ற (நோபல் பரிசு பெற்ற) அறிஞர்கள்கூட சுட்டிக்காட்டியுள்ளனர்!

அவர்கள் பித்தலாட்டம், திரிபுச் செய்திகள் இவற் றைச் செய்துகொண்டே மற்ற முற்போக்குச் சமதர்ம உணர்வாளர்கள்மீது தரக்குறைவான ‘அர்ச்சனை' செய்து, தங்களது ‘இன அரிப்பைத்' தீர்த்துக் கொள்வது மகாவெட்கக்கேடு!

இப்போது நாளும் வெளிவரும் ‘இவாளின்' பத்திரிகா தர்ம யோக்கியதை எப்படிப்பட்டது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள்.

ஆர்.எஸ்.எஸின் திட்டம்

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற போர்வையில் சமூகநீதித் தத்துவத்திற்கு நேர்முரணான ஓர் ஏற்பாட்டினை ஆர்.எஸ்.எஸ். தனது திட்டமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கொடு மையை அம்பலப்படுத்திட உண்மையான சமூகநீதிப் போராளிகள் - தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி, பல முற்போக்குக் கட்சித் தலை வர்களும், சமூகநீதி அமைப்புகளைச் சார்ந்தவர்களும் போராடும்போது,

அவர்களை ‘பித்தலாட்டக்காரர்கள்' என்று ஒரு பார்ப்பன வார ஏடு எழுதி, வசைபாடியுள்ளது! எவ்வளவு ஆணவத் திமிர்?

‘துக்ளக்', ‘ஆர்கனைசர்' போன்ற 

பார்ப்பனிய ஏடுகள் கூறுவது என்ன?

இந்த வாரம் (23.11.2022) வெளிவந்துள்ள ‘துக்ளக்'கில் அதன் ஆசிரியர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள ஸ்ரீமான் குருமூர்த்தி அய்யர்வாள் நாத்தழும்பேறிய நிலையில்,

‘‘சமூகநீதி பேசுகிறவர்கள் எல்லாம் பித்தலாட்டக் காரர்கள்'' என்று மனு தர்மத்தினால் கொழுத்த மமதை யில் கூறுகிறார்.

இவர்களின் புரட்டு ஒன்று இதோ:

‘‘யாருக்குப் புது ஒதுக்கீடு - பொருளாதாரத்தில் பல வீனமானவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களானாலும் அது தவிர, இஸ்லாமிய, கிறிஸ்துவ, சமண, பவுத்த, யூத, ஆங்கிலோ - இந்திய ஆகிய சமயங்களைச் சார்ந்த வர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் புது ஒதுக்கீட்டில் பங்கு உண்டு'' என்னும் குருமூர்த்தியாரின் கோணிப் புளுகு மூட்டை எப்படிப்பட்டது என்பதை விளக்கி, புரிய வைக்க - பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆங்கில வார அதிகாரப்பூர்வ ஏடான ‘‘ஆர்கனைசர்'' 20.11.2022 இல் வந்துள்ள (Latest Issue) வாக்கியத்தை அப்படியே தருகிறோம்.

பக்கம் 32,

IMPORTANT POINTS ABOUT THE

EWS RESERVATION

* In 2019, the Parliament passed the 103rd Amendment of the Constitution, allowing the Government to institute the EWS quota

* The government said that 10 per cent of seats in educational institutions and government jobs would be set aside for people from poorer sections, on the basis of their land holdings, monthly income, or size of the dwelling

* The quota also covers private unaided educational institutions, except the minority educational institutions

* The quota excludes Scheduled Castes (SC) Scheduled Tribes (STs) Other Backward Classes (OBCs) and Socially and Educationally Backward Classes (SEBCs) from its ambit

* The Supreme Court has made it clear that the EWS reservation doesn’t violate the spirit and principles of the constitution

இதன் தமிழாக்கம் வருமாறு:

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு 

இட ஒதுக்கீடு முக்கிய தகவல்கள்

‘‘2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு 103 ஆவது சட்டதிருத்தம் கொண்டுவந்து அரசு வேலை மற்றும் கல்வியில் 10 விழுக்காடு உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது.

இந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஆண்டு வருவாய், சொத்து போன்றவையையும் வரையறை செய்தது.

அனைத்து அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களிலும் 10 விழுக்காடு   இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு ஆணையிட்டது. இதில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. (அதாவது அவர்களுக்குக் கிடையாது).

தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற் படுத்தப்பட்ட (எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.) கல்வி, சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இந்த 10 விழுக்காடு  இட ஒதுக்கீட்டின் கீழ் வரமாட்டார்கள். (அவர்களுக்கும் கிடையாது).''  

ஏழைகள் எஸ்.சி., எஸ்.டி.,களில் இல்லையா?

இதைத்தான் - ‘‘ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்று சொல்லும்போது, எஸ்.சி,. எஸ்.டி., வகுப்புகளில் தானே அதிக ஏழைகள் உள்ளனர். அவர்களை ஒதுக்கி விடலாமா? அது தவறல்லவா? அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்திற்கு விரோதமானதாகும்'' என்று மாறுபட்ட இரண்டு நீதிபதிகள் தீர்ப்பில் கேள்வி எழுப் பப்பட்டுள்ளதே. அந்த முழுப் பூசணியை இப்படி சோற்றில் மறைக்கிறீர்களே, அதுதானே பித்தலாட்டம், அட பித்தலாட்ட பிதாமகர்களே? பதில் என்ன? புரட்டு உடைந்துவிட்டது பார்த்தீர்களா?

‘‘கெட்டிக்காரன் புளுகுக்குக் கூட உச்சவரம்பு எட்டு நாள்'' -  ஆனால், இவர்களின் புளுகு 8 மணி நேரத்தில் உடைந்துவிட்டது; இப்படி பத்திரிகைகளில் ‘விஷய தானம்' செய்யாமல் ‘விஷமதானம்' செய்யும் விஷப் பூச்சுகளே - உங்களது பொய்ப்  பிரச்சாரமும், திரிபுவாத விஷக் கொடுக்கும் உண்மை வீச்சு என்ற கத்திரிக் கோலால் ஒட்ட நறுக்கப்படுவது உறுதி!

புதிய விழிப்புள்ள ஏகலைவன் யுகம் இது - உணருங்கள்!

மேல்ஜாதியினருக்கே கல்வியை - அதன் காரணமாக வேலை வாய்ப்பை ஏகபோகமாக்கிக் கொண்டதைப் பாதுகாக்கவே, மனுவின் இட ஒதுக்கீட்டை நிலைப் படுத்தும் திட்டமே, சட்டமே - 103 ஆவது சட்டத் திருத்தம்.  சமூக அநீதியைப் போக்கவே வந்த இட ஒதுக்கீடு - சமூகநீதித் திட்டத்தைத் தலைகீழாக மாற்று வது பச்சை சமூக அநீதியல்லவா!

முன்பு பிரித்தாண்டது போதாதென்று, இப்போதும் ‘‘விபீஷணர்களை'', ‘‘அண்ணாமலைகளை''த் தேடுகிறார் களே அது போன்று நடக்க இது ஒன்றும் துரோணாச் சாரியார்கள் காலம் அல்ல!

புதிய விழிப்புள்ள ஏகலைவன் புரட்சி பூத்த யுகம் இது என்பதை உணருங்கள்; இன்றேல், உணர வைப்போம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

17.11.2022


No comments:

Post a Comment