திருச்சி, நவ. 8- வங்கி ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தைத் தாமதமின்றிச் சீர மைக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என இந்தியன் ஸ்டேட் வங்கியின் மேனாள் தொழிற்சங்கத் தலை வர்கள் கூட்டமைப் பின் (AFCCOM) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டன.
திருச்சியில் 6.11.2022 அன்று நடைபெற்ற இக் கூட்டமைப்பின் நிர்வா கக் குழு கூட்டத் திற்கு இதன் தலைவர் எஸ்.பி. இராமன் தலைமை வகித் தார். துணைத் தலைவர் டி.வி.சந்திரசேகரன் முன் னிலை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1986ஆம் ஆண்டு முதல் கடந்த 36 ஆண் டுகளாக குறைந்த ஓய்வூ தியத்தில் உடல் நலக் குறைவோடும், விண்ணை முட்டும் விலைவாசியோ டும் அய்ந்து லட்சத்துக்கு மேற்பட்ட வங்கி ஓய்வூதி யர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களில் ஓய்வூதிய தைத் தாமதமின்றி சீர மைத்து உயர்த்த இந்திய வங்கிகள் நிர்வாகத்துக் குத் தகுந்த வழிகாட்டு நெறிகளை ஒன்றிய அரசு வழங்க முன் வரவேண்டும்.
இந்திய ஸ்டேட் வங்கி ஓய்வூதியதாரர்கள் பெறும் தொகையை (Commutation Against Anticipatory Pension) பத்து ஆண்டுகளுக்கு மட் டுமே பிடித்தம் செய்ய வேண்டும்.
கரோனா நோய் தடுப்பு காலத்தில் ரத்து செய்த மூத்த குடிமகக் களுக்கான ரயில் கட்டண பயண சலுகையை மீண் டும் தாமதமின்றி வழங்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும்.
நாற்பது ஆண்டு களாக தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட கிராமப்புற அஞ்சல் ஊழி யர்களை நிரந்தரமாக்கி பணி நிலைமைகளை வரை முறைப்படுத்திட ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.
மரபணு மாற்றப்பட்ட கலப்பினக் கடுகுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விதை உற்பத்திக்கும் வர்த் தக பயன்பாட்டுக்கும் அளித்த அனுமதியை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று நாட்டு நலனையும் விவசாயிகளையும் காப் பாற்ற முன் வரவேண் டும் என வலியுறுத்தி தீர் மானம் நிறை வேற்றப் பட்டுள்ளன.
இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் இச்சங்கத் தின் ஒருங்கிணைப்பாளர் எம்.கே.மூர்த்தி, மேனாள் பொதுச் செயலாளர் டி.சிங்காரவேலு, மதுரை எம்.முருகையா, திருச்சி என்.சுப்பிரமணியன், எம்.சந்திரா கில்பர்ட், வேலூர் ஆர்.லோகநா தன், கோயம்புத்தூர் எம். ரகுநாதன், திருவாரூர் என்.பாண்டுரங்கன், திருச்சி கே.வாசுதேவன், தஞ்சாவூர் வி.பூமிநாதன், மதுரை பரவை எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment