இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா மீதான வழக்கு ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா மீதான வழக்கு ரத்து

சென்னை, நவ. 17- காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் கோயில் புதுப்பிப்பு பணிக்காக தமிழ்நாடு அரசு ரூ. 2 கோடியை ஒதுக்கியது. 

இதுதொடர்பாக டில்லிபாபு என்பவரது புகாரின்பேரில் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் உத்தரவுப்படி சிவகாஞ்சி காவல்துறையினர் இணை ஆணையர் கவிதா உள் ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இணை ஆணையர் கவிதா சென்னை உயர் நீதி மன் றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி.டீக்கா ராமன் பிறப்பித்துள்ள உத்தரவில், “புகார்தாரர் தரப்பில் அளித்துள்ள புகாரை சரிவர ஆய்வு செய்யாமல் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர், அற நிலையத் துறை அதிகாரி கவிதா மீது வழக்குப் பதிய  உத்தரவிட்டுள்ளார்.

அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய் யும் முன்பாக அரசிடம் முறையான முன்அனுமதி பெற வேண்டும். டில்லி பாபு கோயிலுக்கு சொந்த மான கடையில் உள்வாட கையில் இருந்து வந்துள் ளார். அவரை கடையில் இருந்து வெளியேற்றிய தால் உள்நோக்கத்துடன் இந்த புகாரை அளித் துள்ளார். அரசு ஊழியர் கள் தங்களது பணியை பயமின்றி தொடர வேண் டும்.

எனவே அறநிலையத் துறை அதிகாரி கவிதா உள்ளிட்டோருக்கு எதி ராக சிவகாஞ்சி காவல் துறையினர் பதிவு செய் துள்ள வழக்கை ரத்து செய்கிறேன். அதேநேரம் அறநிலையத் துறை செய லர் மற்றும் ஆணையர் ஆகியோர் இணை ஆணையர் கவிதா மீதான குற்றச்சாட்டு குறித்து அவருக்கு மேல்பதவியில் உள்ள 2 அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். அதில் குற்றச் சாட்டுக்கு உரிய முகாந் திரம் இருந்தால் கவிதா மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கலாம்” என உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment